கிருஷ்ணகிரி நகராட்சி 33-வது வார்டில் ஒரு வீட்டில் பூத் சிலிப் வழங்கிய தேர்தல் பணியாளர். 
தமிழகம்

வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வீடு வீடாக விநியோகம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியில் 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை (6-ம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் மொத்தம் 86 வேட்பாளர்கள் போட்டியிட்டுள் ளனர். மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் 15 லட்சத்து 99 ஆயிரத்து 18 வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக 2,258 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன. இதில், 426 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டு, இணையதளம் மூலம் கண்காணிக்கும் பணி களை மாவட்ட நிர்வாகம் மேற் கொண்டுள்ளது.

இதேபோல வாக்காளர்கள் அச்சமில்லாமல் வாக்களிக்கும் வகையில் துணை ராணுவத்தினர், உள்ளூர் போலீஸார் கொடி அணிவகுப்பு பேரணியும் நடத்தினர். இந்நிலையில், 6 சட்டப்பேரவை த்தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று பூத் சீலிப் வழங்கி வருகின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சியில் நேற்று காலை முதல் 150-க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள் வீடு, வீடாகச்சென்று பூத் சிலிப் வழங்கினர். இன்றும் (5-ம் தேதி) பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெறும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT