மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று பிரச் சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக் கான எந்த பணிகளும் நடக்காத மோசமான ஆட்சி நடந்தது. முதியோர் உதவித்தொகை உயர்த்திவழங்கப்படவில்லை. மாணவர்க ளுக்கான கல்வி உதவி தொகை நிறுத்தப்பட்டது. புதுச்சேரிக்கான ஒரே ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலையும் கடந்த ஆட்சியில் மூடப் பட்டுவிட்டது.
ஆளுநரிடம் சண்டை போடு வது, மத்திய அரசை பற்றி விமர்சனம் செய்வதை மட்டுமே கடந்த அரசு செய்து வந்தது. இப் படி இருந்தால், மத்திய அரசு எப்படி நிதி வழங்கும்? மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உறவு கள் நல்லா இருந்தால் மட்டுமே மாநிலத்திற்கான நலத்திட்ட உதவிகளை பெற முடியும்.
கடந்த ஆட்சியில் மாநிலம் 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. இதனை மீட்டு மாநில வளர்ச்சிக்கு கொண்டு செல்ல மத்திய அரசின் ஒத்துழைப்பு வேண்டும். தற்போதைய தேர்தலில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க அளிக்க வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு கள் வித்தியாசம் வெற்றி பெறச் செய்தால் மட்டுமே மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நலத்திட்ட உதவிகளை பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.