தமிழகம்

மழைக்கு பலியான 9 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செய்திப்பிரிவு

பருவமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியும், சுவர் இடிந்து விழுந்தும் உயிரிழந்த 9 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் ஆட்டந்தாங்கலைச் சேர்ந்த சின்னசாமி, பழவேற்காட்டைச் சேர்ந்த சேத்தப்பன், திருமுல்லைவாயிலைச் சேர்ந்த மணிமாறன், சிறுகுமியைச் சேர்ந்த தர்ஷன், அம்பத்தூரைச் சேர்ந்த ஹரீஷ்குமார், வெள்ளிவயலைச் சேர்ந்த தணிகாசலம், தர்மபுரியைச்சேர்ந்த சிவா ஆகியோர் மழை வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர்.

மேலும், திருவள்ளூர், கதிர்வேடைச் சேர்ந்த கோவிந்தராஜ் சுவர் இடிந்து விழுந்தும், திண்டுக்கல் மாவட்டம் ஏ.வெள்ளோடைச் சேர்ந்த சுந்தரராஜ் இடி, மின்னல் தாக்கியதிலும் உயிரிழந்தனர்.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 9 பேர் குடும்பங்களுக்கு, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT