தமிழகம்

பருவமழையால் பலவீனமா?- பள்ளி, கல்லூரி கட்டிடங்களை அரசு உடனே ஆய்வு செய்ய வேண்டும்: பாரிவேந்தர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழையால் பள்ளி, கல்லூரிகளின் கட்டிடங்கள் பலவீனமாகியுள்ளதால் அவற்றை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் பள்ளி, கல்லூரி கட்டிடங் களின் மேல்பகுதியில் நீண்ட நாட்களாகவே மழைநீர் தேங்கி யுள்ளது. இதனால், சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன் கட்டிடத் தில் அரிப்பும் காணப்படுகிறது. இதன்காரணமாக கட்டிடத்தின் உறு தித்தன்மை குறைந்து, இடிவதற் கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் உள்ள மின்சாதனப் பொருட்கள் மழையால் நனைந் திருக்கின்றன. கல்வி நிறுவன வளாகங்களில் தண்ணீர் தேங்கி யுள்ளதால் மாணவர்கள் மீது மின்சாரம் பாயும் ஆபத்து உள்ளது.

எனவே, பலத்த மழை காரண மாக அதிகளவில் பாதிக்கப் பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திரு வண்ணாமலை, விழுப்புரம், நாகை, திருவாரூர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு முன்பு, அவற்றின் கட்டிடங்களின் உறுதித்தன்மையை அரசு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் பாரிவேந்தர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT