காரைக்குடியில் பெரியார் சிலையைச் சுற்றி கட்டப்பட்டுள்ள பாஜக, அதிமுக கொடி. 
தமிழகம்

பெரியார் சிலையை சுற்றி பாஜக கொடி: இரவோடு, இரவாக அகற்ற போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

காரைக்குடியில் பெரியார் சிலையைச் சுற்றிலும் கட்டப்பட்ட பாஜக, அதிமுக கொடியை, இரவோடு, இரவாக அகற்ற போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

காரைக்குடியில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அக்கட்சி தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வந்தார். இதற்காக பாஜக சார்பில் காரைக்குடி வீதிகளில் கொடிகளைக் கட்டினர். அவர்கள் பெரியார் சிலையைச் சுற்றிலும் பாஜக, அதிமுக கொடியைக் கட்டினர். ஏற்கெனவே பெரியார் சிலையைச் சுற்றி கொடியைக் கட்ட என போலீஸார் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் பாஜகவினர் கொடிகளைக் கட்டியதால், இதுகுறித்து போலீஸாரிடம் தி.க.வினர் புகார் கொடுத்தனர். மேலும், அதே சமயத்தில் தி.க. தலைவர் கி.வீரமணியின் பிரச்சாரக் கூட்டம் காரைக்குடியில் நடந்தது.

இதையடுத்து போலீஸார் உடன டியாகச் செயல்பட்டு கொடிகளை அகற்ற பாஜகவினரை வலியுறுத்தினர். அவர்கள் கொடியை இரவோடு, இரவாக அகற்றினர். இதுகுறித்த போலீஸார் கூறுகையில், கொடி கட்ட தனியாரிடம் ஒப்பந்தம் விட்டுள்ளனர். அவர்கள் தவறுதலாக கொடி கட்டினர் என்றனர்.

SCROLL FOR NEXT