சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகரவிளக்கு சீசன் நேரங்களில் செயல்படும் தற்காலிக தபால் நிலைய சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அடர்ந்த வனங்கள் நிறைந்த மலைப்பகுதி என்பதால் சீசன் நேரத்தில் மட்டுமே இங்கு தற்காலிக தபால் நிலையம் செயல்படுகிறது.
மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை தற்காலிக தபால் நிலையம் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த தபால் நிலையம் கடந்த 16-ம் தேதி முதல் ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்கள் தவிர அனைத்து நாட்களிலும் 2016 ஜன. 19-ம் தேதி வரை செயல்படும்.
உடனடி மணியார்டர் சேவை, மின் மணியார்டர் சேவை வசதிகள் இந்த தபால் நிலையத்தில் உள்ளன.
அனைத்து மொபைல்களுக்கு ரீசார்ஜ் வசதி, ஸ்பீடு வசதி, பதிவுத் தபால், இதர தபால் சேவைகள் இந்த தபால் நிலையத்தில் உள்ளன.
கடந்த ஆண்டு ரூ.30 லட்சம் வரை இதே சீசனில் இந்த தற்காலிக தபால் நிலையத்துக்கு வருவாய் கிடைத்துள்ளது.