தமிழகம்

தீபாவளியை முன்னிட்டு தேவைக்கேற்ப கூடுதல் ரயில்கள்: மெட்ரோ ரயில் அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு காலை மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் அதிகமாக வந்தால் கூடுதல் ரயில்களை இயக்க வுள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஆலந்தூர் கோயம்பேடு இடையே கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். தற்போதுள்ள காலஅட்டவணைப் படி கோயம்பேடு, ஆலந்தூரில் காலை 6 மணிக்கு முதல் ரயில் புறப்படும். இதுவே, ஞாயிறுகளில் முதல் ரயில் காலை 8 மணிக்கு தான் புறப்பட்டு செல்லும். அதேபோல், இரவு 10 மணிக்கு கடைசி ரயில் கோயம்பேட்டிலும், ஆலந்தூரில் இருந்தும் இயக்கப்படும். காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் அறிவிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் கூடுதல் நேரங்களில் மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், ‘‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக இருந் தால், தற்போதுள்ள கால அட்ட வணையில் இருந்து தற்காலிக மாக மாற்றி காலையிலும், இரவு 10 மணிக்கு மேலும் மெட்ரோ ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT