புனித வெள்ளியையொட்டி புதுச்சேரி ஆட்டுப்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் சிலுவைப் பாதை திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை பேரணி

செய்திப்பிரிவு

இயேசு சிலுவையில் அறையப் படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அந்நாட்களை கிறிஸ்தவர்கள் வருடந்தோறும் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இந்நாட்களின் கடைசி ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாக கடைபிடிக்கின்றனர்.

இந்த நாளில்தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை கிறிஸ்தவர்கள் நினைவு கூறுகின்றனர்.

அதன்படி நேற்று புனித வெள்ளிகிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுச்சேரியில் தேவாலயங்களில் மும்மணி நேர சிறப்பு வழிபாடு மற்றும்ஆராதனை நடைபெற்றன.

பெரிய சிலுவைப் பாதைபேரணி இடம்பெற்றன. சிலு வையை சுமந்து சென்ற கிறிஸ்தவர்கள் இயேசுவின் பாடுகளை தியானித்தனர். முழுநேர உபவாசம் இருந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். முன்னதாக பெரிய வியாழனையொட்டி நேற்று முன்தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், இயேசுவின் சிலுவை பாடுகளை தியானிக்கும்போது சிலுவைக்கு முத்தம் செய்தல் கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு வணக்கம் செலுத்தும் நிகழ்வாக நடைபெற்றது.

SCROLL FOR NEXT