திருச்செங்கோடு பாவடித் தெருவைச் சேர்ந்தவர் அங்க முத்து(60). அவர் மட்டும் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ஒருவர், தான் வருமான வரித்துறை அதிகாரி எனவும், வீட்டை சோதனையிட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
அதை உண்மையென நம்பிய அங்கமுத்து, அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். வந்த ஆள் பீரோவில் இருந்த நகை, பணத்தை கணக்கிட்டுள்ளார். அப் போது தண்ணீர் கொடுக்கும்படி கேட்ட மர்ம நபர், அங்கமுத்து அங்கிருந்து சென்ற நேர்த்தில், பீரோவில் இருந்த 55 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை திருடி யுள்ளார். பின்னர், சிறிது நேரம் வீட்டில் இருந்த ஆசாமி, ஆய்வு முடிந்துவிட்டதாக கூறிக் கிளம்பிச் சென்றுள்ளார்.
அவர் சென்ற பிறகு பீரோவில் இருந்த நகை, பணம் மற்றும் அங்கிருந்த லேப்டாப் மாயமாகி யிருந்ததைக் கண்டு அங்கமுத்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பிறகே தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்துள்ளார். அது தொடர்பாக திருச்செங்கோடு நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வருமான வரித்துறை அதி காரி போல் நடித்து நகை, பணம் திருடியவரை தேடி வருகின்றனர்.