செயல்படாத நாராயணசாமி ஆட்சி தேவையா? என முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரியில் நேற்று பாஜகசார்பில் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் மற்றும் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் இணைந்து ரெயின்போ நகர், சாரம், மணவெளி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் பேசுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பெண்கள் அனைவருக்கும் இலவச பொது போக்குவரத்து வசதி செய்து தருவோம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கரோனா பேரிடர் காலத்தில் பெறப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்வோம். சுயஉதவிக் குழுக்களுக்கு வட்டி யில்லாமல் ரூ.5 லட்சம் வரை கடன் தரவுள்ளோம்.
அனைத்து மகளிருக்கும் இலவச மருத்துவ உதவி வழங்கப்படும். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உறுதியாக தரப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 50 சதவீதத்துக்கு பெண்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய் வோம். எஸ்சி, எஸ்டி மக்களின் நலனுக்காக பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்துக்கு நிதி அதிகரிக்க வழி செய்யப்படும். நடமாடும் ரேஷன் கடைகளை ஏற்படுத்துவோம்” என்று குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் நமச்சி வாயம் பேசுகையில், “முன்னாள் முதல்வர் நாராயணசாமி பொய் யான தகவல்களை பரப்பி அரசியல் ஆதாயத்துக்காக செயல்படுகிறார். அதை மக்கள் நம்பக்கூடாது. பட்டியலின மக்களுக்கு எதிரான கட்சி என்ற பிரச்சாரம் உண்மையல்ல. நாட் டின் முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்த், தமிழக பாஜக தலைவர் ஆகியோர் இதற்கு உதார ணம். பட்டியல் இனத்தவர், சிறு பான்மையினருக்கு எதிரானவர்கள் என பொய் கூறி மக்களை திசைத் திருப்பி அரசியல் ஆதாயம் தேட நாராயணசாமி முயல்கிறார்.
நாராயணசாமி இலவச அரிசி திட்டத்தை நிறுத்தியதுடன், ரேஷன் கடைகளையும் மூடிவிட்டார். ஓய்வூதியத் தொகையை உயர்த்தி தராமல் வாக்கு கேட்டு வருகிறார். மக்களின் கோரிக்கைகளை அவர்நிறைவேற்றவில்லை. கிரண்பேடியு டன் சண்டை போட்டுக்கொண்டு 5 ஆண்டுகளை வீணாக்கியவர் நாராயணசாமி. மத்தியிலும், மாநி லத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் புதுச்சேரியை வளர்ச்சி அடைய செய்ய முடியும். 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு வேலையே தரவில்லை. செயல்படாத நாராயணசாமி ஆட்சி தேவையா என சிந்திக்க வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக பேசுவோரை அடையாளம் காணுங்கள்” என்று குறிப்பிட்டார்.
பொய் யான தகவல்களை பரப்பி அரசியல் ஆதாயத்துக்காக பேசுவோரை அடையாளம் காணுங்கள்.