சிவகங்கை காந்தி வீதியில் ரம்பத்துடன் வாக்குச் சேகரித்த சுயேச்சை வேட்பாளரை ‘கிலி'யுடன் பார்க்கும் கடைக்காரர். 
தமிழகம்

சிவகங்கை வீதியில் ரம்பத்துடன் சுற்றும் சுயேச்சை: கிலி'யுடன் பார்க்கும் நகர்வாசிகள்

செய்திப்பிரிவு

சிவகங்கை வீதிகளில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் பெரிய ரம்பத்துடன் சென்று வாக்குச் சேகரித்து வருவதை மக்கள் சிறிது அச்சத்துடன் பார்க்கின்றனர்.

சிவகங்கையில் சுயேச்சையாக போட்டியிடும் கலைச்செல்வம் என்பவருக்கு ரம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டதாரியான இவர் தனியாக பெரிய ரம்பத்துடன் சிவகங்கை வீதிகளில் நேற்று வாக்குச் சேகரித்தார். அவர் ரம்பத்துடன் வருவதை மக்கள் லேசான அச்சத்துடன் பார்க்கின்றனர்.

கலைச்செல்வம் கூறுகையில், நண்பர்கள் கூட என்னுடன் வாக்குச் சேகரிக்க வர மறுக்கின்றனர். இதனால் தனியாகச் சென்று வாக்குச் சேகரித்து வருகின்றேன் என்றார்.

SCROLL FOR NEXT