ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

புதுச்சேரியில் நாளை பிரச்சார பொதுக்கூட்டம்; ஸ்டாலின் பங்கேற்பு

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

புதுச்சேரியில் மதச்சார்பற்ற அணியில் காங்கிரஸ், திமுக, சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த அணியினர் புதுச்சேரியில் 29 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட ஏனாமில் வேட்பாளரை நிறுத்தாமல் சுயேட்சையை ஆதரிக்கிறது. மதச்சார்பற்ற அணியில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இதுவரை பிரச்சாரத்துக்கு புதுச்சேரிக்கு வரவில்லை. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (ஏப். 03) புதுச்சேரிக்கு பிரச்சாரத்துக்கு வருகிறார்.

இது தொடர்பாக, திமுக தரப்பில் கூறுகையில், "தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். நாளை காலை வேதாரண்யம், நாகை, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பிரச்சாரம் செய்து விட்டு புதுச்சேரிக்கு மதியம் வருகிறார். மாலை புதுச்சேரி ஏஎப்டி திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவார். பின்னர், மாலை 5.30 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை புறப்படுவார்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT