சென்னை ஆலந்தூரில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தேமுதிகவினருக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்காக சென்னை மாநகராட்சி துணை ஆணையரிடம் தேமுதிகவின் மேற்கு சென்னை மாவட்ட தொண்டர்கள் மனு கொடுக்க சென்றபோது, அவர்கள் மீது ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையிலான குழு தாக்குதல் நடத்தியது. மேலும், தாக்குதலுக்கு ஆளான தேமுதிக தொண்டர்களின் மீதே வழக்கு போடப்பட்டது. இதனைக் கண்டித் தும், அந்த வழக்குகளை வாபஸ் பெறக் கோரியும் ஜனநாயக உரிமை களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தி ருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.