சத்யபிரத சாஹூ 
தமிழகம்

முதல் தலைமுறை வாக்காளர்களுக்கான ‘ஜனநாயகத் திருவிழா’ விழிப்புணர்வு நிகழ்ச்சி- வாக்களிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’ நாளி தழும், சங்கர் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்து நடத்திய ‘ஜனநாயகத் திருவிழா’ எனும் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கான ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றதமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, ‘அனைவரும் வாக்களிக்க வேண்டியதுநம் ஜனநாயக கடமையாகும்’ என்று வலியுறுத்தினார்.

16-வது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் 6-ம் தேதிநடைபெறவுள்ளது. இதில், 18 வயதுநிரம்பிய முதல் தலைமுறைவாக்காளர்கள் லட்சக்கணக்கா னோர் உள்ளனர். இந்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கென கடந்த புதன்கிழமை மாலை நடைபெற்ற ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்வில் தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, ஐஏஎஸ். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நம் இந்திய ஜனநாயகத்தில் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறை வாக்காளர்கள் இந்தத் தேர்தலிலும் பல லட்சம் பேர் உள்ளனர். தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஃபேஸ்புக், யுடியூப்,ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும். பெயர் விடுபட்டவர்கள் ஆன்லைன் மூலமாகவே பதிவுசெய்துகொள்ளும் வசதி எளிதாக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா பரவல் தொற்று இருப்பதால் வாக்குச்சாவடி மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிக்க வரும் அனைவரும் அவசியம்முகக் கவசம் அணிந்துவர வேண்டும். மேலும், வைரஸ் தொற்று பரவாமலிருக்க கைக்கவசம், சானிடைசர் ஆகிய வசதியும் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன. வாக்களிக்கும் நமது ஜனநாயக கடமையை ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு சத்யபிரத சாஹூ கூறினார்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி பயிற்றுநர் டி.அருண்குமார் பேசியதாவது:

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கிட்டத்தட்ட 13 லட்சம் பேர் முதல் தலைமுறை வாக்காளர்களாக உள்ளனர். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை உணர்ந்து, அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, திணை நிலவாசிகள் நாடகக் குழுவின் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிறைவாக, முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்தநிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்வை https://bit.ly/39sJZwW, https://bit.ly/3djbCtI ஆகிய லிங்க்-களில் காணலாம்.

SCROLL FOR NEXT