பணம் வாங்கிக்கொண்டு வாக் களிப்பது மிகப்பெரிய துரோகம் என்று சமத்துவ மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் சமக வேட்பாளர் விவேகானந்தனை ஆதரித்தும், விருதுநகரில் சமக வேட்பாளர் மணிமாறனை ஆதரித் தும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் பிரச்சாரம் செய்தார்.
விருதுநகரில் அவர் பேசிய தாவது: திமுக ஆட்சிக் காலத்தில் மின் தடையினால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பில் திமுக ஈடுபடுகிறது. மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றத்தை கமல்ஹாசன் தலைமையில் உள்ள எங்கள் கூட்டணி நிறைவேற்றும். நாங்கள் நேர்மையானவர்கள். அரசியல் எங்களுக்குத் தொழில் அல்ல. இந்த முறை இரு பிரதான கட்சிகளுக்கு மாற்றாக எங்களுக்கு வாக்களியுங்கள்.அதிமுகவில் தலைமை சரி யில்லாமல் வாக்குறு திகளை அள்ளி விடுகின்றனர். ஏற் கெனவே கடனில் திண்டாடிக் கொண்டிருகிறது தமிழக அரசு.
முதல்வர் என்றுகூட பார்க் காமல் அவருடைய அம்மாவை பற்றி இழிவாக பேசி வருகின்றனர். பெண்களை இதுபோன்று பேசுவது திமுகவுக்கு வழக்கமாகிவிட்டது.
பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிப்பது மிகப்பெரிய துரோகம். சுயமரியாதையுடன் என்னுடைய வாக்கு விற்பனைக்கு அல்ல எனக் கூறுங்கள். நாம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். காசு கொடுத்து ஓட்டு வாங்க நினைக்கும் கட்சியினருக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினார்.