முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதனால் நத்தம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்களை நத்தம் திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம், தான் கொண்டு வந்ததாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார், அதற்குக் கண்டனம் தெரிவித்து நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நத்தம் தொகுதிக்குட்பட்ட செந்துறை, திருநூத்துபட்டி பகுதியில் பிரச்சாரத்தின்போது மக்களிடைய அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து அவர் பேசிய தாவது:
2013-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் நத்தம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு அரசாணை வெளி யிட்டார். காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட வேலைக்கான பணி ஆணையை அதே ஆண்டே வழங்கினார். ஜெயலலிதாவின் ஆலோசனை யின் பேரில் அப்போது அமைச்சராக இருந்த நான் திட்டப்பணிகளை விரைந்து முடித்து 31-12-2017-ல் பயனாளிகளுக்கு அர்ப் பணித்தேன். ஆனால், நத்தம் தொகுதி திமுக எம்எல்ஏவான ஆண்டி அம்பலம், இத்திட்டம் திமுக ஆட்சியின்போது அப்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமியால் நிறைவேற்றப்பட்டது என்று மக் களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இருப்பினும் மக்களுக்கு நலத்திட்டங்களை யார் செய் தது என்று தெரியும் என்ப தால் இம்முறை கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுக்கப்படும் என மக்களிடம் உறுதி அளித் துள்ளேன், என்று கூறினார்.