ஆந்திர தேங்காய்கள் மூலம் தீபாவளி வியாபாரம் முடிந்ததால் சோழவந்தான் பகுதியில் உற்பத்தி யாகும் தேங்காய்களுக்கு தமிழக சந்தைகளில் வரவேற்பு இல்லை அதனால் விற்பனைக்காக வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக் கப்படுகின்றன.
மதுரை மாவட்டத்தில் சோழவந் தான், கொட்டாம்பட்டி, அலங்கா நல்லூர், வாடிப்பட்டி, திருப்பரங் குன்றம், மேலூர் ஆகிய பகுதிகளில் 10,475 ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. இவற்றில் சோழ வந்தான், கொட்டாம்பட்டி, அலங் காநல்லூர் வைகை ஆற்றுப் பாசனப் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தென்னை சாகுபடி செய்துள்ளனர்.
இங்கு உற்பத்தியாகும் தேங் காய், தமிழகத்தின் பிற மாவட் டங்கள், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, மும்பை சந்தைகளுக்கு ஆண்டு முழுவதும் விற்பனைக்கு செல்கின்றன. தற்போது தீபாவளிப் பண்டிகை வியாபாரத்தையொட்டி நல்ல விலை கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள், வியாபாரிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தமிழக சந்தைகளில் வரவேற்பு இல்லாததால் சோழவந்தான், கொட்டாம்பட்டி தேங்காய்கள் வெளிமாநிலங்களுக்கு அடிமாட்டு விலைக்கு அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து சோழவந்தானைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி சந்திரசேகர் கூறியதாவது:
வெளிமாநில கோயில்களில் பூஜைக்கு தமிழகத்தில் இருந்து அதிக அளவு தேங்காய்கள் விற்ப னைக்கு செல்கின்றன. ஆந்திரா வில் இருந்து தேங்காய் வராமல் இருந்தால் தமிழக தேங்காய்க ளுக்கு சந்தைகளில் நல்ல வர வேற்பு கிடைக்கும்.
ஒரு நாளுக்கு 300 லாரிகளில் கூட வெளிமாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதியாகும். தற்போது ஆந்திர தேங்காய் விற்பனைக்காக அதிக அளவு தமிழகத்திற்கு வந்துள்ளது. தீபாவளிப் பண்டிகையில் தேங்காயின் பயன்பாடு முக்கிய மானதாக இருக்கும். ஆந்திர தேங்காய்கள் மூலம் தீபாவளி தேங்காய் வியாபாரம் இந்த ஆண்டு இரு வாரத்திற்கு முன்பே முடிந்துவிட்டது.
அதனால், தற்போது தமிழக தேங்காய்களுக்கு சந்தைகளில் வரவேற்பு இல்லை. சோழவந்தா னில் இருந்து ஒரு தேங்காய் 7 ரூபாய் 40 பைசாவுக்கு மட் டுமே மகாராஷ்டிராவுக்கு ஏற்றுமதி யாகிறது. உள்ளூர் சந்தைகளிலும் விலை குறையத் தொடங்கியுள்ளது.
தேங்காய் விலை குறைந்தால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். இரு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சி, விலை வீழ்ச்சியால் தமிழகத்தில் தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டினர். கடந்த ஒரு ஆண்டாக நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் தென்னை மரங்களை காப்பாற்றி னர். தற்போது ஆந்திர தேங்காய் வருகையால் மீண்டும் தேங்காய் விலை இறங்கு முகமாக இருப்பது கவலையளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.