தமிழகம்

தேர்தல் செலவின கணக்கீடுகளில் ஒருதலைப்பட்சம்: அதிகாரிகள் மீது கரூர் திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தேர்தல் செலவின கணக்கீடுகளில் ஒருதலைப்பட்சமாக செயல்படுவ தாக தேர்தல் அதிகாரிகள் மீது திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கரூர் மாவட்ட திமுக பொறுப் பாளரும், கரூர் தொகுதி திமுக வேட்பாளருமான வி.செந்தில் பாலாஜி எம்எல்ஏ கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளருடன் 30 கார் செல்கிறது. ஒவ்வொரு காரி லிருந்தும் 5 பேர் வீதம் 150 பேர் செல்கின்றனர். பிரச்சார இடத் தில் இருக்கும் 30 பேருடன் கூட்டமாக இருப்பதுபோல படம் எடுத்துக்கொண்டு செல்கின்றனர். தேர்தல் ஆணையம் கண்காணிப் பதுபோல தெரியவில்லை.

நான் பிரச்சாரத்துக்கு செல் லும் இடங்களில் வீடியோ கண் காணிப்புக்குழு தொடர்ந்து கண் காணித்து வருகிறது. பறக்கும் படையினரும் கண்காணித்து வருகின்றனர். தேர்தல் செலவின கணக்குகளில் எனது செலவு கணக்கில் ஒரு ஸ்பீக்கருக்கு கட்டணம் ரூ.3,000 என கணக்கிடுகின்ற னர். ஆனால், ஆளுங்கட்சிக்கு ரூ.600 என கணக்கிடுகின்றனர்.

தேர்தல் அதிகாரிகள் ஒருதலைப் பட்சமாக செயல்படுகின்றனர். உச்சப்பட்ச செலவு என புகார் அளிக்கவும் வழக்குபோடும் வகையிலும் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர்.

கரூரில் அனுமதியின்றி தேர்தல் பணிமனைகள் அமைக்கப்பட்டுள் ளதாக திமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஆளுங்கட்சியினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாட்டுவண்டிகளில் மணல் எடுக்க அனுமதி என மாட்டு வண்டி தொழிலாளர்களை வசப்படுத்த ஏதோ ஒரு உத்தரவை ஆளுங்கட்சியினர் காண்பிக்கின்றனர். ஆனால், மாட்டுவண்டி தொழி லாளர்கள் ஏமாறமாட்டார்கள். ஆளுங்கட்சி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலை நிறுத்த திமுக சதி செய்வதாகக் கூறுகின்றனர். மாநி லத்தில் அதிமுகவும், மத்தியில் அவர்களின் கூட்டணி கட்சியான பாஜகவும் ஆட்சியில் உள்ளன. தேர்தலை யார் நிறுத்த முடியும்.

அரவக்குறிச்சி தொகுதியில் மக்களிடம் பிளவு ஏற்படுத்தி வாக்குகளை பெற பாஜக முயற்சிக்கிறது.

கரூர் மாவட்டத்தில் 4 தொகுதி களிலும் தலா 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்றார்.

SCROLL FOR NEXT