தமிழகம்

1.48 லட்சம் பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம்: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இந்த ஆண்டில் 1.48 லட்சம் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்பட உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேருக்கு திருமண நிதியுதவியுடன் 4 கிராம் தங்க நாணயங்களை வழங்கி இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏழைப் பெண்களின் திருமணத் துக்கு உதவும் வகையில் பல்வேறு திருமண உதவித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்வதற்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை 2011-ம் ஆண்டு ஜூன் 6-ல் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

கடந்த 4 ஆண்டுகளில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 231 பய னாளிகளுக்கு ரூ.2,465 கோடி செலவில் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிதியாண்டில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 935 பய னாளிகளுக்கு திருமண நிதியுத வியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்க ரூ.703.92 கோடி நிதி ஒதுக்கி கடந்த ஜூன் 2-ம் தேதி உத்தரவிடப்பட்டது.இதன்படி, இந்த ஆண்டுக்கான திருமண நிதியுதவி, தங்கம் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெய லலிதா தொடங்கிவைத்தார். திட்டத்தை தொடங்கிவைப்பதன் அடையாளமாக சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேருக்கு திருமண நிதியுதவியுடன் 4 கிராம் தங்க நாணயங்களை முதல்வர் வழங் கினார்.

நிதியுதவி பெற்ற பயனாளி களுக்கு நல்ல முறையில் திரு மணம் முடிந்து சந்தோஷமான வாழ்க்கை அமைய வேண்டும். எல்லா நலமும் பெற்று வாழ வேண்டும் என்றும் முதல்வர் வாழ்த் தினார். பயனாளிகளும் முதல் வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சி யில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, தலைமைச் செயலர் கு.ஞான தேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சமூக நலத்துறை செயலர் பொ.சிவசங்கரன், ஆணை யர் வி.எம்.சேவியர் கிறிசோநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT