செய்யாறு அருகே முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப் பட்டது.
கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், திருவண்ணா மலை மாவட்டத்தில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவுரையை பின்பற்ற மக்கள் முன்வரவில்லை. இதனால், சுகாதாரத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், செய்யாறு அடுத்த அனக்காவூர் காவல் நிலையம் அருகே ஆற்காடு – திண்டிவனம் சாலையில் கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் நேற்று கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அவ் வழி யாக முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்களை சுகாதாரத் துறையினர் தடுத்து நிறுத்தி, அவர் களுக்கு கரோனா பரிசோதனை செய்தனர். மேலும் அவர்கள், கரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முகக்கவசம் வழங்கி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, “கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், முகக்கவசம் அணிவது அவசியம். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஆனால், மக்கள் அலட்சியமாக உள்ளனர். முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றி வருகின்றனர்.
எனவே, முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப் படுகிறது. கரோனா பரவலை தடுக்க வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்” என்றனர்.