2006-க்கு முன் கலவரமாக பூமியாக இருந்த விருத்தாசலம் அமைதிபூமியாக மாறியது விஜயகாந்த் வெற்றி பெற்றதற்கு பின்னர் தான் என விருத்தாசலத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரேமலதா பேசினார்
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று, விருத்தாசலம் பேருந்து நிலையப் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில் அடிதடி, வெட்டுக்குத்து, கட்டப் பஞ்சாயத்து, மரம் வெட்டுதல், கலாச்சார சீரழிவு என கலவர பூமியாக, மக்கள் வாழ்வதற்கே தகுதியற்றதாக இருந்த விருத்தாசலத்தில் 006-க்கு முன் கடை கடையாக நோட்டீஸ் வழங்குவார்கள்,
வசூல் பண்ணுவாங்க, கொடுக்கவில்லை என்றால் அடிதடி தான் என்ற நிலை இருந்தது. 2006-ல் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் அமைதிப் பூங்காவாக மாறியது.
இவற்றையெல்லாம் இங்குள்ள வியபாரிகளும், பொது மக்களும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். 2021 வரை எந்தப் பிரச்சினையும் இப்பகுதி மக்களுக்கு ஏற்படவில்லை.
இன்று விருத்தாசலத்தை உலகமே திரும்பிப் பார்க்கிறது என்றால் அதற்கு விஜயகாந்த் தான் காரணம். நான் வெற்றிபெற்றால் முதல் கோரிக்கை விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்றுவது முதன் பணியாக இருக்கும். இந்தத் தொகுதியில் நான் வெற்றிபெற்றால் நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்றது போன்றது.
தேமுதிக உங்கள் வியாபாரத்தில் ஒரு இடையூறும் இருக்காது. கட்டப்பஞ்சாயத்து செய்யமாட்டோம். முடிந்தால் எங்களோட உதவியை செய்வோம் வியாபாரத்தை பெருக்க அவருக்கு உதவி செய்வோம். இந்த தொகுதி நிம்மதியான நீங்க சந்தோஷமாக வியாபாரம் செய்ய நாம் நிம்மதியாக வாழவேண்டும் சிந்தித்து வாய்ப்பு தாருங்கள்
வன்னியர்களுக்கான இட ஒதுக்கூட்டை தேமுதிக வரவேற்கிறது. இட ஒதுக்கீடு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் என்னுடன் தொலைேசியில் பேசினார் என ராமதாஸ் கூறுகிறார். அதை ஏன் பொதுவெளியில் அறிவிப்பாக வெளியிடவில்லை . அமைச்சர் உதயக்குமார் போன்று பகிரங்கமாக பேச முன்வராதது ஏன்.பாமக நிறுவனர் ராமதாஸூம், ஓபிஎஸ்ஸூம் இணைந்து நாடகமாடுகிறார்கள் என்பது பாமக தோழர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.