தமிழகம்

கருணாநிதி குடும்பம் என்னும் தீய சக்தி தமிழகத்தில் தலையெடுக்கக் கூடாது: அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்

செய்திப்பிரிவு

கருணாநிதி குடும்பம் என்னும் தீய சக்தி தமிழகத்தில் தலையெடுக்கக் கூடாது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாகப் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக, பாஜக மற்று பாமக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தார்.

முன்னதாகத் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, ''நல்லவர்களுக்கும் தீய சக்திக்கும் நடக்கும் தேர்தல் இது. விவசாயிகளுக்கும் ஒரு கோடீஸ்வரருக்கும் இடையில் நடைபெறும் தேர்தல்.

பொதுமக்கள் நலனுக்காக ஆட்சி நடத்தும் அதிமுக அரசு வேண்டுமா, ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஆட்சி நடத்தும் திமுக அரசு, ஸ்டாலின் வேண்டுமா என்று மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இங்கு வருகை தந்திருக்கும் பெரியோர்கள், பெண்கள், இளைஞர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகிய அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்ற வேண்டும். கருணாநிதி குடும்பம் என்னும் தீய சக்தி, இத்தோடு தமிழகத்தில் தலையெடுக்கக் கூடாது.

இந்தத் தேர்தலோடு திமுகவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதை முடிவு செய்து தேர்தல் பணியாற்ற வேண்டும்'' என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, எம்எல்ஏ குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி. தன்ராஜ், முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.சம்பத், பாஜக நிர்வாகிகள் கே.டி.ராகவன், கார்த்திகாயினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT