மானாமதுரையில் அத்தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி. 
தமிழகம்

மணல் கொள்ளையில் ஈடுபட்ட சிவகங்கை அமைச்சர் மீது விசாரணை நடத்தப்படும்: கனிமொழி எம்.பி. பேச்சு

செய்திப்பிரிவு

‘‘மணல் கொள்ளையில் ஈடுபட்ட சிவகங்கை அமைச்சர் மீது விசார ணை நடத்தப்படும்’’ என திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி தெரிவித்தார்.

கனிமொழி எம்.பி. மானா மதுரையில் அத்தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசியையும், சிவகங்கையில் அத்தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர் குணசேகரன், திருப்பத்தூர் தொகுதி மானகிரியில் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரிய கருப்பனையும், காரைக்குடியில் அத்தொகுதி காங்கிரஸ் வேட் பாளர் மாங்குடியையும் ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசி யதாவது: தமிழகத்தில் பெண் களுக்கு எதிரான குற்றங்கள் அதிக ரித்துள்ளன. அதிமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. பாஜக அரசு தமிழக மக்களுக்கு எதிராகக் கொண்டு வரும் அனைத்து சட்டங்களையும் அதிமுக அரசு ஆதரிக்கிறது.

அதிமுக அரசை இந்தத் தேர் தலில் அப்புறப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பாஜக ஓரிடத்தில்கூட வெற்றிபெற முடியாது. தோல்வி பயத்தால் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து அதிமுக அமைச் சர்கள் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும். மணல் கொள் ளையில் ஈடுபட்ட சிவகங்கை அமைச்சர் மீதும் விசாரணை நடைபெறும்.

தமிழகத்தில் இருந்து இந்த ஆட்சி நடக்கவில்லை. டெல்லியில் இருந்து ஆட்சி நடக்கிறது. தமிழன் தமிழகத்தில் இருந்து ஆள வேண்டுமென மக்கள் தெளிவாக உள்ளனர்.

முதல்வராக இருந்த பெண்மணி மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள் ளதால் நியாயமாக விசாரணை நடத்தி இருக்க வேண்டாமா? ஆனால் இதுதொடர்பாக ஓர் அறிக்கைகூட விடவில்லை. ஆனால் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மாவட்டந்தோறும் தனியாக நீதி மன்றங்கள் அமைக்கப்படும், இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT