கோப்புப்படம் 
தமிழகம்

‘காந்தி மார்க்கெட் அதே இடத்தில் சீரமைக்கப்படும்' என அறிவித்துள்ளதால் ஜெயலலிதா தொடங்கிய திட்டத்தை முடக்குகிறாரா முதல்வர் பழனிசாமி? - வாக்கு வங்கி அரசியலுக்காக வளர்ச்சி திட்டங்களை கைவிடுவதாகக் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திருச்சி காந்தி மார்க்கெட் அதே இடத்தில் சீரமைக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளதால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய கள்ளிக்குடி மார்க்கெட் திட்டம் முடக்கப்படுவதாகவும், வாக்கு வங்கி அரசியலுக்காக வளர்ச்சி திட்டங்களை கைவிடுவ தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள் ளது.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நிரந்தர கடைகள், தரைக்கடைகள், மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் என 3,000 கடைகளுக்கு மேல் செயல்பட்டு வருகின்றன. இங்கு வந்து செல்லும் வாகனங்களால் மாநகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதைக் குறைப்பதற்காக மணிகண்டம் அருகே கள்ளிக்குடியில் ரூ.77.6 கோடி செலவில் மத்திய காய்கறி வணிக வளாகம் அமைக்க, கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய ரங்கம் தொகுதி எம்எல்ஏவும், முதல்வருமான ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

கட்டுமான பணிகள் முடிவ டைந்த நிலையில், 2017 செப்.5-ம் தேதி முதல்வர் பழனிசாமி இதை திறந்து வைத்தார். ஆனால் இடவசதி உட்பட பல்வேறு காரணங்களைக் கூறி வியாபாரிகள் அங்குசெல்ல தயங்கினர். எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் மேலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கள்ளிக்குடி மார்க்கெட்டில் கூடு தல் வசதிகள் செய்து தரப்பட்டு, கடந்த 30.6.2018-ல் மீண்டும் திறக்கப் பட்டது. ஆனால் 5 வியாபாரிகள் மட்டுமே அங்கு கடை திறந்தனர். பின்னர் அவர்களும் கடைகளை மூடிவிட்டு, மீண்டும் காந்தி மார்க்கெட்டுக்கே வந்துவிட்டனர்.

அதன்பின், காந்தி மார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு மாற்ற சமூக ஆர்வ லர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், வியாபாரிகளின் கடும் எதிர்ப்பால், இத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், திருச்சி மரக் கடை பகுதியில் அதிமுக வேட் பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் பேசும் போது, ‘காந்தி மார்க்கெட் அதே இடத்தில் சீரமைக்கப் படும்' என அறிவித்தார். இந்த அறிவிப்பு வியாபாரிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலை யில், சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்ட மைப்பு தலைவர் எம்.சேகரன் கூறும் போது, ‘‘எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கு சாதகமாக இல்லை. வாக்கு அரசியலையே மையமாக வைத்து செயல்படுகின்றனர். மார்க்கெட்டில் கடை நடத்தக்கூடிய சுமார் 2,000 பேரின் வாக்குகள் விழும் என்ற நம்பிக்கையில், இந் நகரில் வாழும் சுமார் 10 லட்சம் பேருக்கு இடையூறு ஏற்படுத்து வதுடன், மாநகரின் வளர்ச்சி யையும் புறக்கணிக்கின்றனர்.

குறைந்தபட்சம் இங்குள்ள மொத்த வியாபாரக் கடைகளையா வது மாற்றலாம். ஆனால் எப்படி யாவது மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் முதல் வரும் தற்போது இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக வளர்ச்சித் திட்டங்களை கைவிடு கின்றனர். அதிமுகவைப் போலவே, திமுகவும் இந்த விவகாரத்தில் மக்களைப் பற்றி கவலைப்படாமல் வியாபாரிகளுக்கு சாதகமாகவே உள்ளது’’ என்றார்.

இதுகுறித்து மாநகர மேம்பாட்டு ஆர்வலர்கள் குழு நிர்வாக உறுப்பினரான வி.பி.ஜெகன்நாத் கூறும்போது, “திருச்சி நகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே காந்தி மார்க்கெட்டை இட மாற்றம் செய்ய முடிவு செய்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரங்கம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தபோது நபார்டு வங்கியின் கடனுதவி பெற்று இந்த திட்டத் தைக் கொண்டு வந்தார்.

அவரால் அடிக்கல் நாட்டப் பட்டு, தற்போதைய முதல்வர் பழனிசாமியால் திறந்து வைக் கப்பட்ட கள்ளிக்குடி மார்க்கெட், தற்போது முதல்வர் அறிவிப்பின் மூலம் முடங்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது” என்றார்.

SCROLL FOR NEXT