சிவகங்கை அருகே கண்டாங்கிப்பட்டியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்த அமைச்சர் பாஸ்கரன். 
தமிழகம்

‘சாமி சத்தியமா எங்களுக்குத்தான் வாக்களிக்கணும்'- கிராமத்தினரிடம் உறுதிமொழி வாங்கிய அமைச்சர் ஜி.பாஸ்கரன்

செய்திப்பிரிவு

‘‘உங்க கிராமத்துக்கு நிறைய செஞ்சிருக்கேன். இங்குள்ள மந்தகாளை சாமி சத்தியமா, எங்களுக்குத்தான் வாக்களிக்கணும் என அமைச்சர் ஜி. பாஸ்கரன் பேசினார்.

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனை ஆதரித்து கண்டாங்கிப்பட்டியில் பிரச்சாரம் செய்த அவர் பேசியதாவது:

நான் உங்கள் கிராமத்துக்கு ஏராளமாக செஞ்சிருக்கேன். அதனால் இங்குள்ள மந்தகாளை சாமி சத்தியமா நீங்க இரட்டை இலைக்குத் தான் வாக்களிக்கனும்.

பக்கத்து கிராமத்தில் நான் அமைச்சராக இருந்தும், உங்கள் கிராமத்துக்கு எந்த பிரச்சினையும் செய்யல. உங்களுக்கு என்ன தேவையோ அதை செஞ்சிருக்கோம்.

செந்தில்நாதனுக்கு வாக்களித்தால் நில்லுன்னா நிப்பாரு.. உக்காருன்னா உட்காருவாரு. அந்த அளவுக்கு நாணயமானவரு. நாங்க எந்த கட்சியைச் சேர்ந்தவரா இருந்தாலும் உதவி செஞ்சிருக்கோம். ஆனால், மற்ற கட்சியினர் இந்த கிராமத்துக்கு எதுவும் செய்யல. அதை மனசுல வச்சுக்கிட்டு ஓட்டு போடுங்க என்றார்.

SCROLL FOR NEXT