தமிழகம்

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை தாக்கிய இலங்கை மலையகத் தமிழர் சிறையில் அடைப்பு

செய்திப்பிரிவு

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது தாக்குதல் நடத்தியவர் இலங்கை மலையகத் தமிழர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

‘இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் எதிர்காலம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தனர்.

அப்போது அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், எம்.கே.நாராயணனுக்கு கை கொடுப் பதுபோல சென்று, அவரை தாக்கி னார். விழா மேடையில் இருந்தவர் கள் சுதாரித்துக் கொண்டு, பிரபாகர னிடம் இருந்து எம்.கே.நாராயணனை மீட்டனர். வெளியே நின்ற போலீ ஸார் ஓடிவந்து பிரபாகரனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அரங்கின் வெளியே கொண்டுவரப்பட்ட பிரபாகரன், அங்கிருந்த நிருபர்களிடம், ‘‘இலங் கையில் நடந்த இனப் படு கொலைக்கு முக்கிய காரணம் எம்.கே.நாராயணன்தான். அவரைத் தான் முதலில் கைது செய்திருக்க வேண்டும்’’ என்றார்.

4 பிரிவுகளில் வழக்கு

ராயப்பேட்டை காவல் நிலையத் துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரபாகரனிடம் போலீஸார் விசா ரணை நடத்தினர். அவர் மீது கொலை மிரட்டல், பொது இடத்தில் ஒருவரை தாக்கி அவமானப்படுத்துதல், தாக்குதலில் ஈடுபடுதல் உட்பட 4 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் சென்னை நீலாங்கரையில் உள்ள சைதாப்பேட்டை 18-வது மாஜிஸ் திரேட் மோகனா இல்லத்தில் பிரபா கரனை ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை தொடர்ந்து, பிரபாகரனை புழல் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட பிரபாகரன் இலங்கைத் தமிழர். இவரின் தந்தை பெயர் மெய்யப்பன். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணங்கோட்டையில் நீண்ட நாட்கள் வசித்திருக்கிறார். இவரின் பெற்றோர் இலங்கையின் மலையகத் தமிழர் பகுதியைச் சேர்ந்தவர்கள். பிரபாகரன் இளம் வயதிலேயே தமிழகம் வந்து உறவினர்களுடன் வசித்து வரு கிறார்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே அறை எடுத்து தங்கியுள்ளார். சென்னையில் நடை பெறும் இலங்கைத் தமிழர் சார்ந்த போராட்டங்கள், கருத்தரங்குகள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார்.

எம்.கே.நாராயணன் கலந்து கொண்ட கருத்தரங்கில் பங்கேற்க தொலைபேசி, இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை யறிந்த பிரபாகரன், ராகவன் என்ற பெயரில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்திருக்கிறார்.

பிரபாகரன் தங்கியிருந்த கோயம் பேடு அறையில் சோதனை நடத்தப் பட்டது. அவருடன் தங்கியிருந்தவர் களின் விவரம், அறையின் மேலாளர், உரிமையாளர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

தமிழ் அமைப்புகளுடன் தொடர்பு

பிரபாகரன் சென்னையில் எவ்வளவு நாட்களாக தங்கி இருக்கிறார். அவருக்கு வாடகை அறை பிடித்துக்கொடுத்தது யார். அவருக்கு எந்தெந்த அமைப்பு களுடன் தொடர்பு உள்ளது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. அனைத்து தமிழ் அமைப்புகளிலும் உறுப்பினராக இருப்பதாக பிரபாகரன் கூறியிருக்கிறார்.

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT