தமிழகம்

இரண்டு ஆண்டுகள் நிறைவு: ‘தி இந்து’ செய்திகள் ஏற்படுத்திய தாக்கம்

செய்திப்பிரிவு

மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு

மாமல்லபுரம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு, சுற்றுலாவாக வருவோர் மாமல்லபுரம் கடலின் தன்மையை உணராமல் அதில் குளித்ததால், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2015 மார்ச் வரையில் மட்டும் 27 பேர் உயிரிழந்தனர். மற்ற பகுதிகளைவிட மாமல்லபுரம் கடலில் உள்ள அபாயங்களான எதிர்திசை காற்றினால் ஏற்படும் திடீர் சுழற்சி, ஆங்காங்கே உள்ள பாறைகள், மணல் திட்டுகளில் ஏற்படும் திடீர் பள்ளங்கள். அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விரிவாக ‘தி இந்து’ நாளிதழ் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி செய்தி வெளியிட்டு, கடலோர பாதுகாப்பு குழும மண்டல கண்காணிப்பாளரின் கவனத்துக்கு நேரடியாக கொண்டு சென்றது. இதனால், கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் உயிரிழப்புகளை தடுப்பதற்காக, கடற்கரையில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் மற்றும் கடலில் குளிப்பதை தடுக்கும் வகையில் ஊர்காவல் படையைச் சேர்ந்த 30 வீரர்களை மேற்கூறிய பணிகளில் அமர்த்தியது.இதனால், தற்போது உயிரிழப்புகள் முற்றிலும் குறைந்துள்ளதால், போலீஸார் மற்றும் சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

குடும்ப அட்டைகள் மீது விரைவாக தீர்வு

புதிய குடும்ப அட்டைகள் மற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்வது தொடர்பான பணிகளில், வட்ட வழங்கல் துறையினர் ஆண்டுக்கணக்கில் தாமதப்படுத்துவதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘தி இந்து’நாளிதழில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி விரிவாக செய்தி வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இப்பணிகளில் மாவட்ட வழங்கல் அலுவலர் நேரடி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டார். இதனால், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் பெருங்குடிவாக்கம் பகுதியில் முகவரி மாற்றத்துக்கு விண்ணபித்த 1,500 குடும்ப அட்டைகளில் 800 குடும்ப அட்டைகளுக்கு தீர்வு காணப்பட்டது. திருப்போரூரில், புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்து 30 மாதங்களாக காத்திருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஓருவருக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் உத்தர வின் பேரில் புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டது.

பூங்கா ரயில் நிலையம் செல்ல எஸ்கலேட்டர் வசதி

சென்னை சென்ட்ரல் அருகே மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால், சாலையைக் கடக்க பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் உயரமான நடைமேம்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், எக்ஸ்லேட்டர் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுவதாக ‘உங்கள்குரல்’ பகுதிக்கு புகார் வந்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி 29-ம் தேதி ‘பூங்கா ரயில் நிலைம் அருகே உயரமான நடைமேம்பாலம்: முதியோர்கள் செல்ல முடியாமல் அவதிப்படுவதாக’ செய்தி வெளியானது. இதையடுத்து, அடுத்த 10 நாட்களில் பயணிகளின் வசதிக்காக ஒருபுறத்தில் (சென்ட்ரலில் இருந்து வரும்போது) எஸ்கலேட்டர் வசதி அமைக்கப்பட்டது.

காஸ் மானிய திட்டம்: விளக்கம் பெற்ற பொதுமக்கள்

நேரடி காஸ் மானிய திட்டத்தில் சேர வாடிக்கையாளர்கள் காஸ் ஏஜென்சிகளில் மட்டும் படிவம் கொடுத்தால் போதும். அவர்கள் வங்கிகளுக்கு அனுப்பிவிடு வார்கள் என்ற நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் செயல் படுத்தின. ஆனால் காஸ் ஏஜென்சி கள் அவ்வாறு செயல்படுத்த வில்லை. வெளியூர் வங்கிக் கணக்குகளை சென்னை வங்கி கள் ஏற்பதில்லை என்று காஸ் ஏஜென்சிகள் பதில் அளித்தன. இதுதொடர்பாக வாசகர் அளித்த புகாரின் அடிப்படையில் ‘நேரடி மானிய திட்டத்தில் சேர வங்கியில் தனி படிவம் வழங்க நிர்பந்திக்கும் காஸ் ஏஜென்சிகள்’ என்ற தலைப்பில் கடந்த ஜனவரி 19-ம் தேதி ‘தி இந்து’வில் செய்தி வெளி யானது. அதில் பல்வேறு வங்கி கள் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட மாவட்ட முன் னோடி வங்கி அதிகாரியிடம் தெரிவிக்கலாம் என்று கூறி, அவரது தரைவழி தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த தொலை பேசி எண்ணுக்கு 500-க்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டுள்ளனர்.

அதிக அழைப்புகளால் சிரமத் துக்குள்ளான வங்கி அதிகாரி, அழைப்புகளில் வரும் புகாரை பதிவுசெய்ய சில தினங்க ளுக்கு தனி ஊழியரை நியமித் தார். முதலில் ‘தி இந்து’ நிருபர் மீது கோபம் அடைந்த அதி காரி, தொலைபேசியில் தொடர்பு கொண்ட பலருக்கு வழிகாட்டுதல் களை வழங்கிய பின்னர், பல ருக்கு உதவியது மன நிறைவை அளிக்கிறது. இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய ‘தி இந்து’வுக்கு நன்றி என்று கூறி மகிழ்ந்தார்.

5 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப் பேட்டை அருகே ஜி.என்.டி. சாலையையொட்டியுள்ளது கீழ் முதலம்பேடு கிராமம். இக்கிராமம் முதல், ஏ.என். குப்பம் வரை உள்ள 6 கி.மீ. தூரம் உள்ள சாலையின் பெரும் பகுதி குண்டும், குழியுமாக இருந்தது. ஐந்து ஆண்டுகளாக இந்நிலை தொடர்ந்ததால், கீழ் முதலம்பேடுவை சுற்றியுள்ள 16- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல சிரமங்க ளுக்கு உள்ளாகி வந்தனர்.

இதனை சுட்டிக்காட்டி, 2015, பிப்ரவரி 3-ம் தேதியிட்ட, ‘தி இந்து’ நாளிதழில் விரிவாக செய்தி வெளி யிட்டிருந்தோம். செய்தி வெளி யானவுடன் அதிகாரிகள் ஏ.என். குப்பம் சாலையை புதுப்பித்தனர். இதனால், பொதுமக்கள் ‘தி இந்து’ வுக்கு நன்றி தெரிவித்தனர்.

ரயில் நிலையங்களில் மின்னணு அறிவிப்புப் பலகை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் பயணிகளின் வசதிக் காக பல்வேறு வசதிகள் செய்யப் பட்டுள்ளன. ஆனால் மற்ற ரயில் நிலையங்களில் போதிய வசதிகள் இல்லை. குறிப்பாக, எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும் பெரம்பூர், திரு வள்ளூர் ஆகிய ரயில் நிலையங் களில் எக்ஸ்பிரஸ் ரயில் குறித்து மைக்கில் அறிவிக்கும் வசதி மட் டுமே இருந்தது. ஆனால், அது குறித்த அறிவிப்புப் பலகைகள் அங்கு இல்லை.

அத்துடன், ரயில் பெட்டிகள் எண்கள் குறித்த அறிவிப்புப் பலகை களும் இல்லை. இதனால், பய ணிகள் தங்களுடைய டிக்கெட் முன் பதிவு செய்த பெட்டிகளை கண்டு பிடிப்பதில் மிகுந்த சிரமத் துக்கு ஆளாகி வந்தனர். குறிப் பாக பெரம்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட ரயில் நிலையங்க ளில் ரயில்கள் ஒரு நிமிட நேரம்தான் (ஒருசில ரயில்கள்) நிற்கும். அதற்குள் பயணிகள் தங்க ளுக்கு உரிய பெட்டியில் ஏற வேண் டும். இது குறித்து, ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 2014, நவம்பர் 29-ல் விரிவாக செய்தி வெளியானது.

இதையடுத்து பெரம்பூர், திருவள்ளூர் ஆகிய ரயில் நிலை யங்களில் எலெக்ட்ரானிக் அறிவிப்பு பலகைகள் பொருத்தப் பட்டன. இது தற்போது பயணி களுக்கு பெரும் வசதியாக உள்ளது. இதற்காக பயணிகள் ‘தி இந்து தமிழ்’ நாளிதழுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

சேறும் சகதியுமான சாலையால் தடம் மாறிய ‘ஸ்மால்’ பஸ்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சிக்கு உட்பட்டது மிட்னமல்லி. இப்பகுதிக்கு, பட்டா பிராம் சி.டி.எச். சாலையில் இருந்து செல்லக் கூடிய பிரதான சாலையான இந்திய விமானப் படை சாலையில் பல ஆண்டுகளாக பேருந்துகள் சென்றதில்லை.

இச்சூழலில், இந்த சாலையில், ‘எஸ் 47’ என்ற தடம் எண் கொண்ட இரு ‘ஸ்மால் பஸ்’ கள் ஆவடியிலிருந்து, மிட்னமல்லிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இயக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய விமானப் படை சாலை குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாக மாறியதால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘ஸ்மால்’ பஸ்கள் தடம் மாறி சென்றன. இதனால் பொதுமக்கள் பட்ட இன்னல்கள் குறித்து, 2014 ஆகஸ்ட் 21-ம் தேதியிட்ட, ’தி இந்து’வில் படத்துடன் விரிவாக செய்தி வெளியிட்டோம். அதன் விளைவாக, சில வாரங்களில், விமானப் படை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சாலையை புதிதாக அமைத்தனர். ஆகவே, வழக்கமான தடத்திலேயே ‘ஸ்மால்’ பஸ்கள் இயங்கத் தொடங்கின. இதனால், மிட்னமல்லி பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SCROLL FOR NEXT