காளையார்கோவில் வாரச்சந்தையில் சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்த நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு. (வலது) முன்னறிவிப்பில்லாத திடீர் பிரச்சாரத்தால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ். 
தமிழகம்

வழக்கு பதிவோம் என எச்சரித்த போலீஸ்: பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு நழுவிய நடிகர் கஞ்சா கருப்பு

இ.ஜெகநாதன்

சிவகங்கை தொகுதி காளையார் கோவில் வாரச்சந்தையில் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு பிரச்சாரத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீஸார் அவரை வழக்குப்பதிவோம் எனக் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

காளையார்கோவிலில் வாரந் தோறும் திங்கட்கிழமை சந்தை நடக்கும். இச்சந்தை மதுரை - தொண்டி சாலையில் இருப்பதால் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வாரச்சந்தை நுழைவாயிலில் சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில் நாதனை ஆதரித்து நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு பிரச்சாரம் செய்தார். இதனால் அந்த இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் கஞ்சா கருப்புவிடம் வாகனத்தை எடுக்குமாறு தெரிவித்தனர். ஆனால், அவர் கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டே இருந் தார். ஒருகட்டத்தில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, எரிச்சலான போலீஸார் இப்ப உடனே வண்டிய எடுக்கலன்னா... வழக்குப் போடுவோம் என கஞ்சா கருப்பை கடுமையாக எச்சரித்தனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த கஞ்சா கருப்பு உடனடியாக பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக கிளம்பிச் சென்றார்.

SCROLL FOR NEXT