மறைந்த முதல்வர் ஜெயலலிதா வுக்கு துரோகம் செய்து விட்டு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வமும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள் ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது ஷா நவாஸை ஆதரித்து, நாகை அவுரித்திடலில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது:
பாஜகவுடன் கூட்டணி அமைத் ததற்கு வருத்தம் தெரிவித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்வதை நிறுத்தி விட்டு, மோடியா? லேடியா என்று கூறி பாஜகவை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். நான் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜகவை கால்ஊன்ற விட மாட்டேன். ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன் என்று கூறினார். அதில் வெற்றியும் கண்டார்.
ஆனால், ஜெயலலிதாவின் பெயரை சொல்லிக் கொண்டு ஆட்சி செய்யும் முதல்வர் பழனி சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் ஜெயலலிதா வுக்கு துரோகம் செய்து விட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துள் ளார்கள்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதி களிலும் திமுகவை எதிர்த்து அதிமுக போட்டியிடவில்லை. பாஜக தான் போட்டியிடுகிறது. தேர்தலில் அதிமுக, பாமக வெற்றி பெற்றால், அது பாஜக வெற்றி பெற்றதாக அர்த்தம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 6 தொகுதியில் போட்டி யிடும் 6 பேரும் 6 வேட்பாளர்கள் இல்லை. அறுபடை வீரர்கள். திமுகவுடன் கூட்டணி வைத்துள் ளதால் இந்த 6 பேரும் வரலாறு படைப்பார்கள்.
நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் நாகை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்க.கதிரவனை தேர்வு செய்து அனுப்பினால், எடப்பாடிக்கு கூட விசுவாசமாக இருக்க மாட்டார். மோடிக்கு தான் விசுவாசமாக இருப்பார். தமிழகத்தில் 2-வது பெரிய கட்சியாக பாஜக வர பார்க்கிறது. அதற்காகதான் அதிமுகவை கூட்டணியில் வைத்துள்ளது என்பதை அதிமுக தொண்டர்கள் மறந்துவிடக் கூடாது என்றார்.