திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருவல்லிக்கேணி அயோத்தியா குப்பம் பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார். படம்: க.ஸ்ரீபரத் 
தமிழகம்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியை ஆதரித்து துர்கா ஸ்டாலின் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், உதயநிதி ஸ்டாலினை ஆதரித்துஅவரது தாயார் துர்கா ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறுமாவட்டங்களில் போட்டியிடும் திமுகவேட்பாளர்களை ஆதரித்து உதயநிதிதீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக சேப்பாக்கம் - திருவல்லிகேணி தொகுதியில் திமுகநிர்வாகிகள் மட்டும் தற்போது தீவிரவாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உதயநிதிக்கு ஆதரவாக அவரது தொகுதியில் துர்கா ஸ்டாலின் களமிறங்கியுள்ளார்.

அதன்படி நேற்று அயோத்தி குப்பம் பகுதியில் உள்ள பெண்களைசந்தித்து அவர் வாக்கு சேகரித்தார்.அவர்கள் தந்த மனுக்களை பெற்றுகொண்டு, குறைகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து பெண்கள் மத்தியில் துர்கா ஸ்டாலின் பேசும்போது, ‘‘இந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகஉதயநிதி தேர்வு செய்யப்பட்டால், உங்களின் அனைத்து பிரச்சினைகளும் கட்டாயம் தீர்த்து வைக்கப்படும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிரச்சாரத்தின்போது ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் துர்காஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இத்தொகுதியில் தொடர்ந்துதுர்கா ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொளத்தூர் தொகுதியில் கணவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக துர்கா ஏற்கெனவே பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT