திருவண்ணாமலை ஒன்றியத்தில் பாஜக வேட்பாளர் தணிகைவேலை ஆதரித்து அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் வாக்கு சேகரித்தார்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வேங்கிக்கால், ஆடையூர், தேவனந்தல், கலர்கொட்டாய், புனல்காடு, கோசாலை, அடிஅண்ணாமலை, வேடியப்பனூர், சின்னபாலியப்பட்டு, பெரியபாலியப்பட்டு, அய்யம்பாளையம் புதூர், அய்யம்பாளையம், அத்தியந்தல், ஆணாய்பிறந்தான், காவேரியாம்பூண்டி, பண்டிதப்பட்டு, கணந்தம்பூண்டி, நல்லவன் பாளையம், சாவல்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் பா.ஜ.க வேட்பாளர் தணிகைவேலை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் வாக்கு சேகரித்தார்.
இதேபோல், திருவண்ணாமலை நகரில் 6 இடங்களில் பா.ஜ.க கட்சியின் தேர்தல் அலுவலகங்களை வேட்பாளர் தணிகைவேல் திறந்து வைத்து வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்டச் செயலாளர் குணசேகரன். நகரச் செயலாளர் செல்வம், அமைப்புசாரா ஓட்டுநரணி மாவட்டச் செயலாளர் சுனில்குமார், பேரவை மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.