தமிழகம்

வடகிழக்கு பருவமழை: சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - மாநகராட்சி ஆணையர் தகவல்

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக சென்னை மாநக ராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது 378 மிமீ மழை பெய்தது. இந்த ஆண்டு இதுவரை 186.9 மிமீ மழை பெய்துள்ளது. 196 இடங்களில் தேங் கிய மழைநீர், 83 இடங்களில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள் ளன. சென்னையில் முதல் முறை யாக 194 பேருந்து சாலைகள் சேம்பர் அமைப்புடன் அமைக்கப்பட் டுள்ளன. 471 பேருந்து சாலைகள், 33,374 உட்புற சாலைகளில் இருந்த சிறு பள்ளங்கள் ஒட்டும் பணிகள், குப்பைகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வரு கின்றன. பேருந்து சாலைகளில் மழைநீர் தேங்குவது குறைக்கப் பட்டுள்ளன.

1,860 கிமீ நீளமுள்ள மழைநீர் வடிகால்வாய்களில் சிறப்புமிக்க இயந்திரங்கள் மூலமாக தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 6,200 மெட்ரிக்டன் தூர் வாரப்பட்டுள்ளன. 30 நீர்வழி தடங்களில் இயந்திரங்கள் மூலம் ஆகாய தாமரைகளை அகற்றும் பணி 110 கிமீ தூரத்துக்கு ரூ.13.4 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. மழைநீரை அகற்ற 160 பம்பு செட்டுகள் தயார் நிலையில் உள்ளன. 4 உணவு சமைக்கும் இடங்கள், நிவாரண உதவிகள் வழங்கும் மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப் பட்டு தொடர்ந்து கண்காணிக் கப்படுகின்றன.16 மாநகராட்சி சுரங்கப்பாதைகள், 6 நெடுஞ்சாலை சுரங்கப்பாதைகளில் நீர் தேங்காமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடையாறு மற்றும் கூவம் வடிநிலைப் பகுதிகளில் ரூ.1,107 கோடி செலவில் வடிகால்வாய் அமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன. 4,083 உட்புறச் சாலைகளில் கான்கிரீட் மற்றும் தார் சாலை அமைக்கும் பணி ரூ.400 கோடி செலவில் தொடங்கப்படும். வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு புதிதாக சாலைகள் போடும் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT