கனமழைக்கு காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நகரப்பகுதியில், மஞ்சள்நீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நகரத்தின் முக்கிய சாலைகளான காந்திசாலை, காமராஜர் சாலை மற்றும் ராஜவீதிகள் வெள்ளநீரில் மிதக்கின்றன. இதனால், வையாவூர் ஏரியின் உடைப்பினால் திருக்காலிமேடு, வையாவூர் நத்தப் பேட்டை ஆகிய பகுதிகளில் சூழ்ந்த வெள்ளநீர் வடியாமல் அப் படியே தேங்கி நிற்கிறது. அப்பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைக் கப்பட்டுள்ளனர்.
வேகவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, கரையோரம் மற்றும் ஆற்றின் வரத்து கால்வாய் களை ஒட்டியுள்ள பகுதிகளான தேனம்பாக்கம், செவிலிமேடு, பிள்ளையார்பாளையம் ஆகிய பகுதிகள் நீர் சூழ்ந்துள்ளது. காஞ்சி புரம், வாலாஜாபாத், பாலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 14 ஏரிகளின் கரைகள் உடைந்துள்ளதால் வெளி யேறும் தண்ணீர் செங்கல்பட்டு நீஞ்சல் மடுவுக்குச் செல்லும் கால்வாயில் பாய்கிறது. இதனால், நீஞ்சல் மடுவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மகாலட்சுமி நகர், திம்மா வரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி களின் குடியிருப்புகள் தொடர்ந்து வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதுகுறித்து, முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் கூறிய தாவது: முகாம்களில் தங்கு வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், இடபற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை தங்கவைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்கள் கடுமை யான அவதிக்குள்ளாகி வருகின்ற னர். பிரசவித்து சிலமாதங்களே ஆன தாய்மார்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை. மருத்து வர்கள் வரவில்லை என்றனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி கூறியதாவது: மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. எனினும், தொடர்ந்து மழைநீர் வடிவதற்கான பணி களை பல்வேறு அரசுதுறை அதிகாரி கள் மேற்கொண்டு வருகின்ற னர். முகாம்களில் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சை அளிப்பதற்கான நட வடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
திருவள்ளூர்
தொடர் மழையால் திருவள்ளூர் மாவட்டமும் வெள்ளத்தில் மிதக் கிறது. நீர் நிலைகள் நிரம்பி வழிந் தோடும் உபரி நீர் குடியிருப்புகள், சாலைகளில் தேங்குகிறது. ஆவடி வீட்டுவசதி வாரிய பகுதி, காந்திநகர், சங்கர் நகர், கொரட்டூர், அம்பத்தூர், திருநின்றவூர்-சுதேசி நகர், மாதவரம் அருகே உள்ள மாத்தூர், பூந்தமல்லி அருகே உள்ள கொப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
செங்குன்றம் மற்றும் மாதவரம் ஜிஎன்டி சாலை, அம்பத்தூர் சிடிஎச் சாலை, புழல், மணலி, பாடியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. செங்குன்றம் பஸ் நிலையம் வெள் ளத்தால் சூழ்ந்துள்ளது.
3 நதிகளில் வெள்ளம்
கூவம், கொசஸ்தலை, ஆரணி ஆகிய நதிகளில் மழைநீர் கரை புரண்டு ஓடுகிறது. பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளின் அருகே உள்ள ஆந்திர பகுதிகளில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள உள்ள அம்மப்பள்ளி தடுப்பணை மற்றும் ஆரணி ஆற்றுக்கு அருகே உள்ள பிச்சாட்டூர் ஏரியை அதிக மழையின் காரணமாக ஆந்திர பொதுப்பணித் துறை அதிகாரிகள் திறந்து விட்டுள்ளனர்.
இதனால் கூவம், கொசஸ்தலை, ஆரணி ஆகிய 3 ஆறுகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதில், கூவம் நதியின் குறுக்கே, திருவள்ளூர் அருகே உள்ள மண வாளநகர் தரைப்பாலம், புதுசத்தி ரம் தரைப்பாலம், அடையாளம் பட்டுவில் இரு தரை பாலங்கள் நீரில் மூழ்கின. நெற்குன்றம் அருகே உள்ள ரயில் நகர் தரைப் பாலம் மழைநீரில் அடித்துச் செல் லப்பட்டன.
கொசஸ்தலை ஆற்றில் பெருக் கெடுத்ததால் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நாராயணபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலம் அடித்து செல்லப் பட்டது. இதனால், சென்னை திருப் பதி தேசிய நெடுஞ் சாலை யில், திருவள்ளூர்- திருத்தணி மார்க் கத்தில் போக்கு வரத்து நிறுத்தப் பட்டுள்ளது. அதே போல், ஆரணி ஆற்றில் கரை புரண்டு ஓடும் மழை நீரில், ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியுள் ளது. இதனால், ஊத்துக் கோட்டை- திருவள்ளூர் சாலை யில் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது.
ஆரணி ஆற்றுக்கரையோரத்தில் உள்ள குமரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல குடிசை வீடுகள் நீரில் மூழ்கின. ஆரணி ஆற்றின் குறுக்கே பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் தடுப் பணையின் ஷட்டர் சற்று விலகிய தால், மழைநீர் பெருக் கெடுத்து ஓடுகிறது.
மழைக்கு 5 பேர் பலி: வெள்ளத்தில் சிக்கிய 344 பேர் மீட்கப்பட்டனர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு 5 பேர் பலியாகினர். இது தவிர வெள்ளத்தில் சிக்கிய 344 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
சாலவாக்கம் அடுத்த இந்திரா நகர் காலனியைச் சேர்ந்தவர் கெங்கன் (74). இவர், வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, பலத்த மழை காரண மாக வீட்டின் சுவர் இடிந்து விழுந் தது. இதில், இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
கூடுவாஞ்சேரி அடுத்த ராதா கிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் முனுசாமி(63). இவர், நந்திவரம் ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, தவறி விழுந்ததில், நீரில் மூழ்கி பலியானார். செங்கல்பட்டு அடுத்த ராட்டினக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலை (80). ஏரிக் கரை அருகே நடந்து சென்றபோது தவறி விழுந்ததில், நீரில் முழ்கி உயிரிழந்தார்.
இதேபோல், செங்கல்பட்டு அடுத்த பட்ரவாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(12) அஞ்சூர் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறு வதை வேடிக்கை பார்க்கச் சென்ற போது, ஏரியில் தவறி விழுந்து பலியானார். மேலும், அஞ்சூர் ஏரியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக, போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
344 பேர் மீட்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய 344 பேரை தீயணைப்பு மற்றும் கடலோர பாதுகாப்பு குழும வீரர்கள் மீட்டனர். இதன் படி 162 ஆண்கள் மற்றும் 182 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இது தவிர வாலாஜாபாத் அடுத்த தேவேரியம்பாக்கம் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 11 மாடு களை, தீயணைப்பு துறை வீரர்கள் போராடி மீட்டனர்.
மாமல்லபுரம் பகுதியில் உள்ள சிற்பகலைக்கல்லூரியின் பின்னால், வெள்ளத்தில் சிக்கிய கோவளத்தைச் சேர்ந்த சந்தி ரிகா(70), பிரேமா(60) ஆகியோரை கடலோர பாதுகாப்பு குழும வீரர்கள் படகில் சென்று மீட்டனர்.
கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: தடுப்பணை இல்லாததால் கடலில் கலப்பு
கடந்த 18 ஆண்டுக்குப்பிறகு பாலாற்றில் வெள்ளம் ஏற் பட்டுள்ளது. தடுப்பணை இல் லாததால் வினாடிக்கு 31 ஆயிரம் கனஅடி நீர் கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொடர் மழை எதிரொலியாக கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரி நிரம்பி அதன் உபரிநீர் என வினாடிக்கு 10,600 கனஅடியாக நீர் கிளியாற்று வழியாக பாலாற் றில் கலந்து வருகிறது. இதே போல், வேகவதி ஆற்றின் ஏற்பட்ட வெள்ளமும் பாலாற்றில் கலக்கிறது. வல்லிபுரம் பகுதி யிலிருந்து பாலாற்றில் வினாடிக்கு 31 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.
இதனால், திருக்கழுக்குன்றம், செய்யூர் பகுதி கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் தடுப்பணை ஏதும் இல்லாததால் 31 ஆயிரம் கனஅடி தண்ணீர், வீணாக கடலில் கலந்து வருகிறது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: 18 ஆண்டுகள் கழித்து நமக்கு கிடைத்த தண் ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. தேவைக்கு அதிகமாக இருந்து கடலில் கலப்பதை தவறு எனக்கூற முடியாது. ஆனால், பொதுப்பணித்துறையின் முன் னெச்சரிக்கை இல்லாத செயலால், சேமிக்க வேண்டிய தண்ணீர் அனைத்தும் கரைகள் உடைப்பு மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கடலில் கலந்து வருகிறது. இனி மேலாவது, அரசுத்துறைகள் வரத்து கால்வாயிகளின் ஆக்கிரமிப்பு களை துணிவாக அகற்றி, நீர்நிலை களை காப்பாற்ற வேண்டும் என்றனர்.
கனமழையினால் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் குளம் நிரம்பி வழிவதால் குளத்தின் அருகே செல்வதற்கும் பிரகாரத்தை சுற்றிவரவும் பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரி திறப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது.
பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு அளவு 35 அடியாகும். அதிக நீர்வரத்து காரணமாக 33.4 அடி அளவை நேற்று மாலை எட்டியது. இதனால் பொதுப்பணித்துறையினர் நேற்று மாலை முதல் தண்ணீரை திறந்துவிட முடிவு செய்தனர். இதன்படி, வினாடிக்கு 300 கனஅடி அளவில் திறக்கப்பட்ட நீர் படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 1960 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர்வரத்து உள்ளது.
வெள்ளம் பெருக்கெடுத்ததால் இரு தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து கடும் பாதிப்பு
தொடர்மழை மற்றும் ஏரிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் ஆறாக பாய்வதால் தேசிய நெடுஞ் சாலையில் போக்குவரத்து கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக காஞ்சி புரம் மாவட்டத்தில் 700-க்கும் மேற் பட்ட ஏரிகள் நிரம்பி வழிகின் றன. மேலும், 16-க்கும் மேற் பட்ட ஏரிகளின் கரைகள் உடைந்தி ருப்பதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காஞ்சிபுரம், வாலாஜா பாத் மற்றும் அதை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.
இந்நிலையில், கூடுவாஞ்சேரி அருகே உள்ள நந்திவரம் ஏரி அதன் முழு கொள்ளளவை தாண்டி யதால் உபரிநீர் வெளியேற்றப் படுகிறது. இதனால், மிக முக்கிய போக்குவரத்து சாலையான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இதேபோல், கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் ஏரி நிரம்பி அதன் கரை உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், பழைய மகாபலிபுரம் சாலையில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள் ளது.
ஸ்ரீபெரும்புதூர் பெரிய ஏரி நிரம்பி, அதன் உபரி நீர் கலங்கல் வழியாக வெளியேற்றப்பட்டு வரு வதால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீபெரும் புதூரிலிருந்து, இருங்காட்டு கோட்டை வரை ஒரு வழி போக்கு வரத்தாக மாற்றப் பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் கடுமை யான போக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளது.