பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை சந்தித்துப் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். 
தமிழகம்

பேரூர் ஆதீனத்துடன் கமல்ஹாசன் சந்திப்பு

செய்திப்பிரிவு

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். ஏற்கெனவே இஸ்லாமிய ஜமாத் தலைவர்கள், கிறிஸ்தவ பிஷப் மற்றும் பல்வேறு சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டிய கமல்ஹாசன், நேற்று பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை சந்தித்தார்.

அப்போது, கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட முடிவெடுத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்த மருதாசல அடிகளார், கமல்ஹாசனின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்துவருவதாகவும், மத நல்லிணக் கத்துக்காக கமல்ஹாசனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது என்றும் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் “மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக அதிக செய்திகளை சொல்கிறீர்கள், சொல்லும் விஷயங்களை அப்படியே செயல்படுத்த வேண்டும், சமூகத்தின் அடிமட்டத் தில் உள்ள மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும், அப்படியான ஒரு நிலையை தொடர்ந்தால், மறுமலர்ச்சியை எதிர்பார்க்க முடியும்.

பேரூர் தமிழ்க் கல்லூரி மூலமாகவும், நிர்வாகம் மூலமாகவும் கிராம சபை, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் போன்றவைகளுக்காக குரல் கொடுத்து வருகிறோம்” என்றார். “நிச்சயமாக சொல்லும் விஷயங் களை செயல்படுத்து வேன்” எனக் கூறிய கமல்ஹாசன், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பொதுமக்களுடன் சந்திப்பு

முன்னதாக நேற்று காலை ரேஸ்கோர்ஸ் குடியிருப்போர் சங்க (ரானா) நிர்வாகிகளை கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது, சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், “மாநகராட்சி 71 மற்றும் 73-வது வார்டுகளுக்கு உட்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் குப்பை மற்றும் தாவர கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும், போக்குவரத்து நெரிசல் மற்றும் கார் பார்க்கிங் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், முத்தமிழ் மன்றம் என்ற அமைப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

அந்த அமைப்புக்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தனியிடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT