தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் கே.துரைராஜ், கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் கே.சிவா ஆகியோரை ஆதரித்து வடவள்ளி பகுதியில், விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, “நேர்மையை நம்புகிறவர்கள் எங்களை ஆதரிக்க வேண்டும். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். அதன்மூலம் ஏற்றம் வரும்.
அதற்கு இந்த 2 வேட்பாளர்களுமே மிகப்பெரிய பங்களிப்பைச் செய்வார்கள். உங்கள் வேட்பாளர் நேர்மையாக இருக்கும்போது, நீங்களும் நேர்மையாக இருக்கிறீர்கள் என்று பொருள். மக்கள் விழிப்போடும், கவனத்தோடும் வாக்களிக்க வேண்டும். அதன்மூலம் சரியான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்”என்றார்.