மானாமதுரை தொகுதிக்குட்பட்ட இளையான்குடியில் காரில் இருந்தபடி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சிவசங்கரியிடம் பொன்னாடை பெற்றுக் கொண்ட சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். 
தமிழகம்

இளையான்குடியில் பிரச்சாரம் செய்யாமல் சென்ற சரத்குமார்: ஏமாற்றமடைந்த மநீம வேட்பாளர்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதிக்குட்பட்ட இளையான்குடிக்கு தாமதமாக வந்ததால் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பிரச்சாரம் செய்யாமல் புறப்பட்டுச் சென்றார். இதனால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஏமாற்றமடைந்தார்.

மானாமதுரை (தனி) தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிவசங்கரி என்பவர் போட்டியிடுகிறார். அவரை ஆத ரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று இளையான்குடியில் வாள்மேல் நடந்த கோயில் அருகே பிரச் சாரம் செய்வதாக இருந்தது. மாலை 3.30 மணிக்கு சரத்குமார் இளையான்குடி வந்தார்.

ஆனால் காரில் இருந்து இறங்கவில்லை. இதையடுத்து வேட்பாளர் சிவசங்கரி, சரத்கு மாரிடம் பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் தாமதமாகிவிட்டதால் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பிரச்சாரம் செய்ய போகிறேன் என்று கூறினார். வேட்பாளருக்கு மட்டும் வணக்கம் தெரி வித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் வேட்பாளரும், அவரது ஆதரவாளர்களும் ஏமாற்ற மடைந்தனர்.

SCROLL FOR NEXT