ராஜபாளையம் தொகுதியில் தொழில் வளர்ச்சிக்குப் புதிய திட்டங்களைக் கொண்டு வருவேன் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி அளித்தார்.
ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வெங்கா நல்லூர், சிதம்ப ராபுரம், பட்டியூர், இளம்பிறை கொண்டான், அம்மையப்பபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், அயன் கொல்லங்கொண்டான், நக்கனேரி, தேவதானம், காமராஜ் நகர், முத்துசாமிபுரம், சுந்தரராஜபுரம், கணபதி சுந்தரநாச்சியார்புரம் உட்பட பகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்தார். சுந்தரநாச்சியார்புரம் தூய லூர்து ஆலயத்துக்குச் சென்ற அமைச்சர் அங்கு பாதிரியாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கிராம மக்களிடம் அமைச்சர் பேசும்போது, தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு கிராமத்திலும் சிறப்பு முகாம் நடத்தப்படும். தற்போது பெறப்பட்ட மனுக்கள், சிறப்பு முகாமில் தரப்படும் மனுக்களில் உள்ள கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படும். ராஜபாளையம் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். தொழில் வளர்ச்சிக்குப் புதிய திட்டங்களை கொண்டு வருவேன் என்றார்.