தமிழகம்

புதுச்சேரி இளைஞர்களுக்கு ஓராண்டுக்குள் வேலை தராவிட்டால் நடுரோட்டில் நிற்கவைத்து அடியுங்கள்: முன்னாள் எம்.பி. கண்ணன்

செ.ஞானபிரகாஷ்

பாஜக ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்குள் புதுச்சேரியில் இளைஞர்களுக்கு வேலை தராவிட்டால் நடுரோட்டில் நிற்க வைத்து அடியுங்கள் என்று முன்னாள் எம்.பி கண்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் அண்மையில் இணைந்த முன்னாள் எம்.பி கண்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்லியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆட்சியையும்,அதிகாரத்தையும் கையில் வைத்திருந்தார். பிரதமர் அலுவலகத்தில் அதிகார உச்சத்தில் சிங்கம் போல் இருந்தார்.

புதுச்சேரி வளர்ச்சிக்கு அவர் ஏன் ஏதும் செய்யவில்லை? நாராயணசாமியும், மத்தியில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸும் புதுச்சேரிக்கு எதுவும் செய்யவில்லை.

ரங்கசாமி முதல்வராக இருந்தபோது,வீரேந்திர கட்டாரியா என்ற ஆளுநரை வைத்துக்கொண்டு முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்கு நாராயணசாமி தொல்லை கொடுத்தனர்.

புதுச்சேரியில் 2.5 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கப் போகின்ற திட்டத்தை பாஜக அறித்துள்ளது. ஓராண்டு காலக்கெடுவில் ஏராளமானோருக்கு வேலை கொடுப்போம். இல்லாவிட்டால், நடுரோட்டில் நிற்க வைத்து என்னை அடியுங்கள்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க போவதாக அறிவித்தனர். யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. பித்தலாட்டமான ஏமாற்றும் விதத்தில் வாக்குறுதியை அளித்தனர்.

புதுச்சேரிக்கு பாஜக வந்ததுமே காங்கிரஸுக்கு பயம் வந்து தோல்வி பயத்தில் பாஜகவை ரவுடி கட்சி என பச்சை பொய்யை

சொல்லுகின்றனர். கார்பரேட் என்பது ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை. காங்கிரஸ் கட்சியில் கார்ப்பரேட் இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

காங்கிரஸுக்கு வாக்களிப்பது நமது தலையில் நாமே நெருப்பை போட்டுக்கொள்வது போன்றதுதான்" என்று குறிப்பிட்டார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் கூறுகையில், "மீனவர்களை மத்திய அரசு உடனடியாக இலங்கையிலிருந்து மீட்டுள்ளது. பாஜக கலவரம் தூண்டுவதாக நாராயணசாமி பிரச்சினைகளை திசை திருப்புகிறார். அதுதான் காங்கிரஸின் செயல்பாடு. அனைத்து மக்களும் முன்னேற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு" என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT