தமிழகம்

பிரதர் என்று கூப்பிடுங்கள்; சார் வேண்டாம்: ஸ்டாலினுக்கு அன்புக்கட்டளை இட்ட ராகுல்

செய்திப்பிரிவு

சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தனக்கும், ராகுல் காந்திக்கும் நடந்த சுவாரஸ்ய உரையாடல் பற்றிப் பேசினார். சார் என்று என்னை அழைக்காதீர்கள், பிரதர் என்று கூப்பிடுங்கள் என்று ராகுல் அன்புக்கட்டளை இட்டதாகக் கூறியதும் தொண்டர்கள் கரவொலி எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

சேலத்தில் நடந்த மதச்சார்பற்ற அணியின் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் ராகுலுடன் நடந்த போன் உரையாடலைக் குறிப்பிட்டார்.

“இங்கே இளம் தலைவர் ராகுல் வந்திருக்கிறார். அவரிடத்தில் ஒரு அன்பான வேண்டுகோள். அன்பான வேண்டுகோள் அல்ல, உரிமையான வேண்டுகோள்.

தொலைபேசியில் பேசும்போது சில நேரங்களில், சார்… சார்… என்று அவரிடம் பேசுவேன். அவர் உடனே மறுப்பார். ''இனிமேல் என்னை சார் என்று கூப்பிடக் கூடாது. 'பிரதர்' என்றுதான் கூப்பிட வேண்டும். ஒரு சகோதரனாக நினைத்துக் கொள்ள வேண்டும்'' என்று அடிக்கடி சொல்வார்.

எனவே, சகோதரர் ராகுல் அவர்களே… உங்களுக்கு ஒரு உரிமை கலந்த அன்பான வேண்டுகோள்.
என்று'' என்று ஸ்டாலின் பேச்சைத் தொடங்கினார்.

அப்போது கூட்டத்தினர் கரவொலி எழுப்பினார்கள். ராகுல் பக்கத்தில் அமர்ந்திருந்த கே.எஸ்.அழகிரி ராகுலுக்கு ஸ்டாலின் பேசியதை விளக்கிச் சொன்னார். அதைக் கேட்டு ராகுலும் சிரித்தார்.

SCROLL FOR NEXT