புதுச்சேரியில் கலவரத்தை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி நாள்தோறும் பிரச் சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், மணவெளி தொகுதி யில் போட்டியிடும் காங்., வேட்பாளர் அனந்த ராமனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். வாக்காளர்களிடையே நாராயணசாமி பேசி யது:
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பாஜக நிற்கிறது. அந்தக் கட்சியின் வேட்பாளர் இந்தத் தொகுதியில் நிற்பதற்கு யோக்கியதை இருக்கிறதா? என்று நீங்களே (மக்கள்) சொல்லுங்கள். புதுவையில் எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றினோம். அதனை மோடியும், கிரண்பேடியும் சேர்ந்து தடுத்தி நிறுத்தினார்கள். அதனையும் மீறி திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறோம்.
மணவெளி தொகுதியில் நல்லவாடு பாலம் காங்கிரஸ் ஆட்சியில்தான் கட்டித் திறக்கப்பட்டது. ரூ.88 கோடியில் சாலை, குடிநீர், பள்ளிக் கூடம் சீரமைப்பு உள்ளிட்ட பலத் திட்டங்களை இந்தத் தொகுதியில் செய்துள்ளோம். ஆனால், தேர்தல் நேரத் தில் பாஜக என சொல்லிக் கொண்டு வரு கின்றனர். அப்படி வரும் நபருக்கு ஓட்டு போட்டால் பாலாறும், தேனாறும் ஓடும் என்கின்றனர். பாஜகவுக்கு ஓட்டு போட்டால் சாக்கடை தான் ஓடும். காங்கிரஸ் ஆட்சியில் மட்டும்தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
அரிசி போட நிதி ஒதுக்கினோம். அதனை கிரண்பேடி தடுத்து நிறுத்தினார். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தோம். அதனை மோடி அரசு தடுத்து நிறுத்தி யது. தனியார் மருத்துவக் கல்லூரியில் 50 சதவீத இடஒதுக்கீடு பெறுவதையும் தடுத்து நிறுத்தினர். இப்படிச் செய்த கட்சியைச் சேர்ந்த, பாஜக வேட்பாளருக்கு ஓட்டு போட வேண்டுமா?
பெட்ரோல் 90 ரூபாயைத் தாண்டிவிட்டது. விரைவில் ரூ.100 ஆகிவிடும். டீசல் ரூ.89, சமையல் எரிவாயு ரூ.900. இதுதான் மோடி ஆட்சியின் லட்சணம். விலைவாசியை குறைக்கவில்லை.
புதுவை மாநிலத்துக்கு நிதி கொடுக்க வில்லை. ஆனால், மோடி ஆட்சியில் புதுவையில் புதிய திட்டங்களைக் கொண்டு வருவோம் என்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமையை படிப்படியாக பறித்து புதுவையை தமிழகத்துடன் இணைக்கிற வேலையை மோடி செய் கிறார். இதற்கு நாம் இடம் கொடுக்கலாமா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நியமன எம்எல்ஏக்கள் மூலம் கவிழ்த்தனர். இந்தத் தேர்தல் நமக்கு மிகப்பெரிய சவால். பாஜக பணநாயகத்தோடும், நாங்கள் ஜனநாயகத்தோடும் வந்து நிற்கிறோம். ஜனநாயகம் வெல்லுமா? பணநாயகம் வெல்லுமா? நிச்சயம் ஜனநாயகம்தான் வெல்லும். இதுதான் சரித்திரம்.
தேர்தல்துறை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். வடமாநிலத்திலிருந்தும், கர்நாடகாவில் இருந்தும் வந்தவர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்துகின் றனர். பாஜகவிற்கு ஓட்டு கேட்க ஆள் இல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை கொண்டு வருகின்றனர். பாஜக கள்ள ஓட்டு போட தயாராகி விட்டது. எனவே, பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
தேர்தலின்போது கலவரத்தை தூண்ட பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளி வருகிறது. இதை காவல்துறை கண்காணிக்க வேண்டும். கர்நாடகத்திலிருந்து பாஜகவினர் பலர் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். பல தொகுதிகளில் வாக்காளர்களின் ரேஷன் கார்டுகளை பாஜகவினர் கேட்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக தேர்தல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒழித்தது மோடி அரசு. ஆனால் நல்லவாட்டில் உள்ள மீனவர்களை பார்க்க மத்திய அமைச்சர் வருகிறாராம். பாஜகவுடன் என்ஆர் காங்கி ரஸ் கூட்டணி சேர்ந்துள்ளது. மாநில அதி காரம் பறிப்பதை என்ஆர் காங்., வேடிக்கை பார்க்கக் கூடாது. அவர்கள் நம்மோடு இணைந்து புதுவையின் உரிமையை காக்கவேண்டும். புதுவைக்கு தனி மாநில அந் தஸ்து வாங்குவது காங்கிரஸின் கொள்கை. புதுவை மக்களை காப்பாற்ற வேண்டும். தமிழகத்தோடு புதுச்சேரி இணைப்பதை நாங்கள் உயிர் தியாகம் செய்தாவது காப்பாற்று வோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, பாகூரில் திமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது, வைத்திலி ங்கம் எம்பி, முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.