தமிழகம்

‘கிரிக்கெட்டில் நான் ஆல் ரவுண்டர்’

எஸ். நீலவண்ணன்

விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்.பி லட்சு மணன் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் பரப்புரை மேற்கொள்ளும் அவர், இளைஞர்களைக் கவர ஆங்காங்கே சில சென்டிமென்ட் ‘டச்’ கொடுத்து பிரச்சாரம் செய்கிறார்.

ராகவன்பேட்டை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட லட்சுமணன், அங்கு மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் வாக்கு சேகரித்தார். சிறிது நேரம் அவர் மட்டையைப் பிடிக்க இளைஞர்கள் பந்து வீசி மகிழ்ந்தனர். தனது கல்லூரி காலங்களில் கிரிக்கெட் ஆடியதை அப்போது அவர்களிடையே நினைவு கூர்ந்தார்.

“கல்லூரியில் படிக்கும் போது நான் ரைட் ஹாண்ட் பௌலர் மற்றும் லெப்ட் ஹாண்ட் பேட்ஸ் மேன். கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய நாட்கள் மறக்க முடியாதது. இப்போதும் வீட்டில் ஓய்வு நேரங்களில் என் மகனின் நண்பர்களுடம் விளையாடி வருகிறேன். மொத்தத்தில் நான் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்” என்றார்.

மருத்துவராகி, அதிமுகவில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்து தற்போது, சட்டப்பேரவைக்கு முயல்கிறார்.

அடுத்தடுத்து இவருக்கு ஸ்கோர் கூடுமா..! என்பது அவர் ஆடும் ஆட்டத்தை பொறுத்தும், எதிர் தரப்பு (சி.வி.சண்முகம்) வீசும் பந்தை அவர் எதிர் கொள்வதை பொறுத்தும் அமையும்.

SCROLL FOR NEXT