போடி தொகுதி பாலார்பட்டியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு அணிவிப்பதற்காக இயந்திரத்தில் கொண்டு வரப்பட்ட பிரம்மாண்டமான மாலை. 
தமிழகம்

போடியில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு பிரம்மாண்ட மாலை வரவேற்பு

செய்திப்பிரிவு

போடி தொகுதி திமுகவேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் உப்பார்பட்டி, குச்சனூர், கூழையனூர் உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

பாலார்பட்டியில் பிரம் மாண்டமான மாலை அணிவித்து இவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மண் அள்ளும்இயந்திரம் மூலம் இந்த மாலைஉயர்த்திப் பிடிக்கப்பட்டது. தங்க தமிழ்ச்செல்வன் இதன்அருகில் நின்று மாலையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, எங்கிருந்தாலும் உண்மையாகவும், உழைப்பவனாகவும் இருந்தி ருக்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம் போல நான் நடித்தது கிடையாது. வெற்றி பெற்றால் சொத்து வாங்கி குவிக்க மாட்டேன். என் நலனை முன்னிறுத்தாமல் மக்கள் நலனையே முக்கியமாகக் கருதிச் செயல்படுவேன் என்றார். தொடர்ந்து தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

SCROLL FOR NEXT