சட்டவிரோத கழிவுநீர் இணைப்புக் கான அபராதத் தொகையை உயர்த் துவதற்கான திட்டத்தை விரைந்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இதுதொடர்பாக மாற்றம் இந் தியா அமைப்பின் இயக்குநர் நாரா யணன் வழக்கு தொடர்ந்திருந் தார். இவ்வழக்கை விசா ரித்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:-
இயற்கை சீற்றத்தால் தற்போது எதிர்கொள்ளும் விளைவுகள் மூலம், அதிகாரிகள் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும். அவசர பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, அப்பணிகளை உடனடி யாக மேற்கொள்ள வேண்டும். வெள்ள நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் இருப்பதால், நாங் கள் மேலும் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
கடந்த அக்டோபர் மாதம் இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை யடுத்து நவம்பர் 2-ம் தேதி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டம் நடந்துள்ளது. சட்டவிரோத கழிவுநீர் இணைப்புக்கு விதிக்கப்படும் அப ராதத் தொகையை உயர்த்துவது தொடர்பான திட்டத்தை அனுப்ப வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட் டது.
அதன்படி தாக்கல் செய்யப் பட்ட திட்டத்தில், கூடுதலாக 304 சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு கண்டுபிடித்து அடைக்கப்பட்டது என்றும், ஏற்கனவே 7720 கழிவு நீர் இணைப்பு கண்டுபிடித்து அடைக்கப்பட்டுவிட்டது என்றும், சட்டவிரோத கழிவுநீர் இணைப்புக்கான அபராதத்தை தொகையும் திருத்தி அமைக் கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. சாதாரண கட்டிடம் மற்றும் குடியிருப்பாக இருந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம், வணிக கட்டிடமாக இருந்தால் ரூ.10 ஆயிரம், சிறப்பு கட்டிடத்துக்கு ரூ.25 ஆயிரம், சிறப்பு வணிக கட்டிடத்துக்கு ரூ.50 ஆயிரம், அடுக்குமாடி கட்டிடத்துக்கு ரூ.1 லட்சம், வணிகத்துக் கான அடுக்குமாடி கட்டிடத்துக்கு ரூ.2 லட்சமாக அபராதத் தொகையை உயர்த்தத் திட்ட மிடப்பட்டுள்ளது.
ஆனால், இதனை அமல் படுத்துவதற்கு சட்டப்பேரவை மற்றும் நிர்வாக அனுமதி பெற வேண்டியுள்ளது. அதற்கு நிறைய காலம் ஆகும் என்று கூறுவதை ஏற்க முடியாது. இத்திட்டத்தை விரைந்து அமல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசாரணை ஒத்திவைப்பு
மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் இணைப்பின் மொத்த நீளம் எவ்வளவு என்பதையும், அதை சரிபார்ப்பதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதையும் திட்ட அறிக்கையாக தயாரிக்க வேண்டும். கூடுதல் இயந்திரங்கள் வாங்குவதற்கும், தற்காலிக பணியாளர்களை நியமிக்கவும் மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும். அதன்மூலம்தான் அடுத்த மழைக் காலத்தில் இத்தகைய விளைவுகளை தவிர்க்க முடியும். வழக்கு விசாரணை ஜனவரி 29-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.