கண்ணங்குடி அருகே கப்பலூரில் கே.ஆர்.ராமசாமி வீட்டில் அவரிடம் ஆசி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி. 
தமிழகம்

காரைக்குடி எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமியை சந்தித்து ஆசி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்

செய்திப்பிரிவு

காரைக்குடி எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமியை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி ஆசி பெற்றார்.

காரைக்குடியில் தற்போதைய எம்எல்ஏ வாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.ஆர்.ராமசாமி. அவர் இத்தேர்தலில் தனது மகன் கருமாணிக்கத்துக்கு ராமநாதபுரம் மாவட்டம் திரு வாடானை தொகுதியைக் கேட்ட தால் காரைக்குடியில் போட்டியிடவில்லை.

இதையடுத்து காரைக்குடி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் ஆதரவாளரான முன்னாள் ஊராட்சித் தலைவர் மாங்குடியும், தற்போதைய எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமியின் ஆதரவாளரான தேவகோட்டை முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுச்சாமியும் சீட் கேட்டனர்.

இதற்கிடையே தேவகோட்டையில் நடந்த காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப் பாளர்கள் கூட்டத்தில் வேலுச்சாமிக்கு சீட் கேட்டு அவரது ஆதரவாளர்கள் ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டனர்.ஆனால் வேட்பாளராக மாங்குடி அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து காரைக்குடியில் மாங்குடிக்கு காங்கிரஸார் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் கே.ஆர்.ராமசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை.

கண்ணங்குடி, தேவகோட்டை பகுதிகளில் கே.ஆர்.ராமசாமி ஆதரவின்றி வாக்குகளைப் பெறுவது சிரமம். இதனால் நேற்று கே.ஆர்.ராமசாமியை கண்ணங்குடி அருகே கப்பலூரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து மாங்குடி ஆசி பெற்றார்.

இதையடுத்து கண்ணங்குடி, தேவகோட்டை பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT