தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயதாரணியை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சியின் 49 மாவட்டத் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்களுக்கும் மகிளா காங்கிரஸ் தலைவர் விஜய தாரணியின் ஆதரவாளர்களுக்கும் இடையே சமீபத்தில் மோதல் வெடித்தது. இதன் பேரில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சூழலில், விஜயதாரணியை காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள 61 மாவட்டத் தலைவர்களில் 49 பேர் கூட்டறிக்கை வெளியிட் டுள்ளனர். அந்த கூட்டறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பொறுப்பேற்ற ஓராண்டில் தீவிர மாக இயக்கப்பணியாற்றி வருகி றார். இதனால், அவர் மீது பல அவதூறு வழக்குகள் தொடுக் கப்பட்டுள்ளன. இதனை எதிர் கொள்ள காங்கிரஸ் கட்சி பயப்பட வில்லை. ஆனால், கட்சிக்குள் ளேயே சிலர், இளங்கோவன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியினர் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி விஜய தாரணி சில நாட்களுக்கு முன்பு முறையிட்டார். நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், அதுகுறித்து புகார் மனு கொடுங்கள் என்று இளங்கோவன் கூறினார். அதை கேட் காமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய தாரணி அராஜகப் போக்கோடு கூறி னார். பேசித் தீர்க்க வேண்டிய இப்பிரச்சினைக்கு, மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் சாந்தாநி, மானஸா பாத்திமா உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால், இளங்கோவன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, விஜயதாரணியை மகிளா காங்கிரஸ் தலைவர் பொறுப்பு உட்பட காங்கிரஸ் கட்சியின் அடிப் படை உறுப்பினர் பொறுப்பு வரை அனைத்திலிருந்தும் நீக்க வேண் டும். இந்த நடவடிக்கையை காங்கி ரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி விரைவில் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.