காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத் தால் 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண் டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏரிகள் நிரம்பி, மழைநீர் கரை புரண்டு ஓடியது. இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாய நிலங் களில் பயிரிடப்பட்ட நெல் மற்றும் தோட்டப் பயிர்கள் சேதமடைந்தன. இந்த பாதிப்பு குறித்து வேளாண் துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.
இதனிடையே பயிர்கள் பாதிப்பு குறித்து காஞ்சிபுரம் மாவட்ட விவ சாயிகள் சங்கச் செயலர் கே.நேரு விடம் கேட்டபோது அவர் கூறிய தாவது: கடந்த 15 நாட்களாக காஞ்சி புரம் மாவட்டத்தில் பெய்த கனமழை யால் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் மற்றும் வாழை, கரும்பு, கத்தரிக் காய் போன்ற தோட்டப் பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மழை வெள் ளத்தால் நெல் பயிர்கள் நிலத்தில் சாய்ந்து, நெல் மணிகள் முளைத்து விட்டன. மேலும் 10 ஏக்கரில் நெல் பயிர் செய்வதற்காக விடப் பட்டிருந்த நாற்றுகள், நீரில் மூழ்கி அழுகிவிட்டன. எனவே வெள் ளத்தால் சேதமடைந்த ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.25 ஆயிரமும், ஒரு ஏக்கர் நெல் நாற்றுக்கு ரூ.5 ஆயிரமும் நிவாரணமாக வழங்க வேண்டும்.
மேலும் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 46 மாடுகள், 300 ஆடுகள், 6 ஆயிரம் நாட்டுக் கோழிகள் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளன. அதனால் மாடுகளுக்கு தலா ரூ.40 ஆயிரம், ஆடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், கோழிகளுக்கு தலா ரூ.400 என நிவாரணம் வழங்க வேண்டும்.
கனமழையால் வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாய கூலித் தொழிலாளர்கள் குடும்பங்க ளுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வெள்ளத்தால் சேதமடைந்த 700-க்கும் மேற்பட்ட சாலைகள், 1000-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும். சேதமடைந்த 244 ஏரிகளையும் புனரமைக்க வேண்டும். சேதம் தொடர்பாக வேளாண்துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து ஆய்வு செய்ய வேண்டும். பாலாற்றில் வெள்ள நீரை சேமிக்க குறைந்தது 5 இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்றார்.