திமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.சம்பத் இன்று பாஜகவில் இணைகிறார்.
திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் மகனும், விழுப்புரம் மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.ஜி.சம்பத் திமுகவிலிருந்து விலகுவதாகச் செய்தி வெளியானது.
இதுகுறித்து அவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, "21 ஆண்டுகளாக கட்சியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், கடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் என் தந்தைக்கு மணிமண்டபம் கட்டுவதாக வாக்குறுதி அளித்தனர்.
தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையில் இதுகுறித்துச் சொல்லப்படவில்லை. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதைக் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் என் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் பாஜகவில் இணைகிறேன்" என்று ஏ.ஜி.சம்பத் தெரிவித்தார்.