தமிழகம்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வகையை தடை செய்க: மத்திய அமைச்சர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

செய்திப்பிரிவு

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வகையை தடை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர், “டெல்லி பல்கலைக்கழகத்தின் மரபணு பொறியியல் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வகையை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது.இந்த கடுகு வகைக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது. அதை தடை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT