சிவகங்கை அருகே பனங்காடியில் உள்ள தோட்டத்து வீட்டில் காவலில் வைக்கப்பட்ட கருணாஸ் எம்எல்ஏ. 
தமிழகம்

முதல்வருக்கு கருப்புக் கொடி காட்ட முடிவு- வீட்டுக் காவலில் கருணாஸ் எம்எல்ஏ:

செய்திப்பிரிவு

முதல்வர் பழனிசாமிக்கு கருப்புக் கொடி காட்ட முடிவு செய்திருந்த முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் எம்எல்ஏவை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர்.

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை கண்டித்து தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வேன் என கருணாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி காரைக்குடி ஹெச்.ராஜாவை ஆதரித்து நேற்று பேசினார்.

முன்னதாக முக்குலத்தோர் சமுதாயத்தை முதல்வர்,துணை முதல்வர் புறக்கணிப்பதாகக் கூறி முதல்வருக்கு திருப்பத்தூரில் கருப்புக் கொடி காட்ட கருணாஸ் மற்றும் முக்குலத்தோர் புலிப்படையினர் முடிவு செய்திருந்தனர்.

இதையறிந்த போலீஸார் சிவகங்கை அருகே பனங்காடியில் உள்ள வீட்டில் தங்கியிருந்தகருணாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை முன்னெச்சரிக்கையாக வீட்டுக் காவலில் வைத்த னர். மேலும் முக்குலத்தோர் புலிப்படை மாவட்டத் தலைவர் வெள்ளைச்சாமி திருப்பத்தூரில் கைது செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT