தமிழகம்

கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களை திசை திருப்புகிறார்கள்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களை திசை திருப்புகிறார்கள் என கிருஷ்ணகிரியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட அமமுக வேட்பாளர்கள் ஓசூர் மாரே கவுடு, தளி சேகர், பர்கூர் கணேசகுமார், கிருஷ்ணகிரி அகில இந்திய மஜ்லிஸ் கட்சி வேட்பாளர் அமீனுல்லா, தேமுதிக வேட்பாளர்கள் வேப்பனப்பள்ளி எஸ்.எம்.முருகேசன், ஊத்தங்கரை பாக்கியராஜ் ஆகியோரை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று சூளகிரி மற்றும் கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

திமுகவினர் தற்போது ஆட்சிக்கு வந்தது போல் செயல்படுகிறார்கள். ஏற்கெனவே பிரியாணி கடை, டீக்கடை, பியூட்டி பார்லர் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. நீங்கள் எல்லாம் கல்லா பெட்டியில் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் வந்து கலெக் ஷன் செய்து சென்று விடுவார்கள். இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்களை திசை திருப்புகிறார்கள். மோசடியாக கூட சில கருத்துக் கணிப்புகள் வருகின்றன. இவை அனைத்தும் மோசடி என்பதை தேர்தல் முடிவில் மக்கள் தெரிவிப்பார்கள்.,’’ என்றார்.

தருமபுரி வள்ளலார் மைதானத்தில் நேற்று அமமுக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாலக்கோடு தேமுதிக வேட்பாளர் விஜயசங்கர், பென்னாகரம் தேமுதிக வேட்பாளர் உதயகுமார் , தருமபுரி அமமுக வேட்பாளர் டி.கே.ராஜேந்திரன், பாப்பிரெட்டிப்பட்டி வேட்பாளர் பழனியப்பன், அரூர் வேட்பாளர் ஆர்.ஆர்.முருகன் ஆகியோருக்கு ஆதரவு கேட்டு பேசினார்.

SCROLL FOR NEXT